சூரியனின் நிறம் பற்றிய கேள்வி எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு நிறமா இல்லை எல்லாம் சேர்ந்த நிறமா என ஒவ்வொரும் ஒரு நிறத்தை கூறுவர். விஞ்ஞானிகள் கூறும் அறிவியல் பதில்கள் இங்கே.
சூரியன் எல்லாம் சேர்ந்த நிறம் ஏனென்றால் அதை நாம் ப்ளாக் பாடி ரேடியேட்டர் என்று அழைக்கிறோம். எல்லா நட்சத்திரங்களையும் போலவே, இது முழு மின்காந்த நிறமாலையிலும் (சில அளவில்) கதிர்வீச்சு செய்கிறது, இதில் தெரியும் நிறமாலையின் அனைத்து வண்ணங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
எனினும் பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் சூரியன் வெள்ளை நிறத்தை கொண்டுள்ளது என கூறியுள்ளனர். நாசா கூறுகையில், சூரியனின் நிறம் நிலப்பரப்பு வெப்பம், பூமி சூழல் மற்றும் மனிதக் கண்களுக்கு தெரியும் நிலை ஆகியவையால் ஈர்க்கப்படுகிறது.
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது சூரியன் வெள்ளை நிறமாகத் தெரிகிறது. ஏனெனில் இது முழு ஸ்பெக்ட்ரத்தையும் வலுவாக வெளியிடுகிறது என்று கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“