அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட உலக நாடுகள் இணைந்து பூமிக்கு சில தூரம் அப்பால் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளனர். அங்கு விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையம் பற்றிய முழு தகவல்களை பார்ப்போம்.
சர்வதேச விண்வெளி நிலையம் ஒரு பெரிய விண்கலம் ஆகும். இது பூமியைச் சுற்றி வருகிறது. இது விண்வெளி வீரர்கள் வசிக்கும் வீடு. விண்வெளி நிலையம் ஒரு அறிவியல் ஆய்வகமாகவும் உள்ளது.
விண்வெளி நிலையம் பல பாகங்களால் ஆனது. விண்வெளி வீரர்களால் ஒவ்வொரு பகுதியாக கட்டமைக்கப்பட்டு விண்வெளியில் ஒன்றாக இணைக்கப்பட்டன. விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதை பூமியில் இருந்து சுமார் 250 மைல் தூரத்தில் உள்ளது.
விண்வெளி நிலையத்தில் முதல் குழு நவம்பர் 2,2000-ல் அனுப்பபட்டது. விண்வெளி நிலையம் ஐந்து படுக்கையறைகள் கொண்ட ஒரு வீட்டைப் போல பெரியது. இதில் இரண்டு குளியலறைகள், ஒரு உடற்பயிற்சி கூடம் மற்றும் ஒரு பெரிய ஜன்னல் இருக்கும். அங்கு ஆறு பேர் வசிக்கலாம்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பாவின் அறிவியல் ஆய்வகங்களைக் கொண்டுள்ளது.