தமிழ்நாட்டில் உள்ள பத்திரப் பதிவு அலுவலகங்களில் கிராம நத்தம் பட்டா பதிவுடைய வீடு மற்றும் காலி இடம் போன்றவற்றை பதிவு செய்ய தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.
இதனால் சொத்துக்களை விற்கமுடியாமலும் புதிய சொத்துக்களை வாங்க முடியாமலும் மக்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மேற்கூறிய காரணங்களால் அவர்களுக்கு வீட்டுக் கடன் கிடைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது.
இது தொடர்பாக கோவை மண்டல பத்திரப் பதிவு துணைத் தலைவர் சுவாமிநாதன், “கிராம நத்தம் நிலங்களை பதிவு செய்யாமல் வருவாய்த்துறையினர் அறநிலையத்துறை நிலங்கள் உள்ளிட்ட அரசு சார்ந்த நிலங்கள் குறித்த தகவல்களை ஆன்லைனில் பதிவேற்றி வருகின்றனர்” என்றார்.
மேலும், “கிராம நத்தம் நிலங்களும் அதில் வருகின்றன. இவை, ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டன. அதனால் கிராம நத்தம் நிலங்களில் பெரும்பாலானவை பதிவு செய்யப்பட்டு வருகிறது” என்றும் தெரிவித்தார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் 16 பத்திரப்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் வீடு, மனை இடம், காலி இடம், நன்செய் மற்றும் புன்செய் உள்ளிட்ட அனைத்துப் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், திருமணம், வர்த்தகம், சங்கம் உள்ளிட்ட பதிவுகளும் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“