சில நாட்களாக வாட்ஸ்அப் பிங்க் என்ற வார்த்தையை அதிகமாக கேள்விபட்டிருப்போம். உண்மையில் இது ஒரு மோசடி ஆப் ஆகும். இதில் இருந்து பயனர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பிங்க் நிறத்திலான இந்த வாட்ஸ்அப் டவுன்லோடு செய்வதன் மூலம் பயனர்கள் மோசடியில் சிக்க வாய்ப்புள்ளது. வாட்ஸ்அப் ஃபார்வர்ட் மூலம் இந்த பிங்க் வாட்ஸ்அப்-க்கு லிங்க் அனுப்பபடும். அதில் பல்வேறு அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ள இந்த புதிய வெர்ஷன் வாட்ஸ்அப்பை டவுன்லோடு செய்யுங்கள் என மெசேஜ் கொடுக்கப்பட்டிருக்கும்.
Advertisment
வாட்ஸ்அப் பிங்க் நிறமாக மாறும் போது உங்கள் வங்கி கணக்கு விவரங்கள், ஓ.டி.பி, போட்டோ மற்றும் பிற முக்கிய தகவல்கள் திருடப்படுகின்றன. இந்த மாத தொடக்கத்தில், மும்பை சைபர் கிரைம் காவல்துறை இந்த பிங்க் நிற வாட்ஸ்அப் குறித்து எச்சரிக்கை விடுத்தனர். மக்கள் சமூகவலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்தும் படி அறிவுறுத்தினர்.
வாட்ஸ்அப் பிங்க் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி?
இது போன்ற மோசடிகளில் சிக்காமல் பாதுகாப்பாக இருக்க சந்தேகப்படும்படியான லிங்க் மெசேஜ்கள், இ-மெயில் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் பிளே ஸ்டோர் தளங்களில் இருந்து மட்டும் ஆப் டவுன்லோடு செய்யவும். இருப்பினும், ஐபோன் பயனர்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் அடையாள தெரியாத தளங்களில் இருந்து ஆப்களை டவுன்லோடு செய்ய ஆப்பிள் அனுமதிக்காது.
Advertisment
Advertisements
மேலும் வாட்ஸ்அப் 'ஃபார்வர்டு' மெசேஜ்களில் வரும் லிங்க்குள், APK ஃபைல்களை டவுன்லோடு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
எப்போதும் போல் அன்இன்ஸ்டால் செய்ய முடியாது
வாட்ஸ்அப் பிங்க் அன்இன்ஸ்டால் செய்ய முதலில் உங்கள் 'Linked devices' இணைப்புகளை துண்டிக்கவும். அதில் உள்ள சந்தேகத்திற்கிடமான லிங்குகளை நீக்கவும். ஒரு முறை வாட்ஸ்அப் பிங்க் இன்ஸ்டால் செய்யப்பட்டால், ஆப் உங்கள் போன் "Installed Apps" பக்கத்தில் இருந்து இது மறைக்கப்படும்.
இதைக் கண்டுபிடிக்க உங்கள் போன் செட்டிங்ஸ் பக்கம் சென்று "ஆப்ஸ்" (Apps) பகுதிக்குச் செல்லவும். அங்கு பிங்க் நிற லோகோவுடன் வாட்ஸ்அப் பிங்க் கொடுக்கப்பட்டிருக்கும் அதை கண்டறிந்து அன்இன்ஸ்டால் செய்யவும். உங்கள் போனில் இருந்து ஆப் முழுமையாக நீக்கப்பட்டதாக என்பதை உறுதி செய்து கொள்ளவும்.