இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணத்தை தமிழ்நாடு உட்பட உலகில் பல்வேறு இடங்களில் மக்கள் கண்டு கழித்து வருகின்றனர். இருந்தாலும், இந்த சூரிய கிரகணத்தை அறிவியலாளர்கள் சில முக்கிய அறிவியல் ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தி வருகின்றனர்.
இன்று காணப்பட்டது அரிய வகை சூரிய கிரகணமா ?
சூரிய கிரகணத்தின் மூலம் விஞ்ஞானிகள் தேடும் பதில் :
கொரோனா:
சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புற பிளாசுமா பகுதியை கொரோனா என்று அழைக்கப்படுகிறது . சூரியனின் மேற்பரப்பு பகுதி எப்போதும் பிரகாசமாக இருப்பதால் இந்த கொரோனா பகுதியை இயல்பாக பார்ப்பது கடினம். இந்த கொரோனா பகுதியை பார்க்க வேண்டுமென்றால் சிறப்பு ஆராய்சிக் கருவிகள் பயன்படுத்துவது வழக்கம். இருப்பினும், மொத்த சூரிய கிரகணத்தின் போது இந்த கொரோனாவைப் வெறும் கண்ணால் கூட பார்க்க முடியும் . ஏனெனில், சூரிய கிரகணத்தின் போது, சூரியனின் பிரகாசமான ஒளியை சந்திரன் தடுப்பதால், ஒளிரும் வெள்ளை கொரோனா கிரகணத்தின் போது காணப்படுகிறது.
சூரிய கிரகணம் பற்றிய உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் இங்கே பதில்
இந்த கொரோனா என்றுமே புரியாத புதிர் :
மேலுள்ள, புகைப்டத்தை பாருங்கள்.
கொரோனாவின் வெப்பநிலை சூரியனின் மேற்பரப்பு (போடோஸ்பியர், க்ரோமொஸ்பியர்) வெப்பநிலையை விட பலமடங்கு (கிட்ட தட்ட நூறு மடங்கு) அதிகமாக உள்ளது. அதவாத, சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் கொரோனா பிளாசுமா பகுதியில் எவ்வாறு இப்படி உயர் வெப்பநிலை என்பது இன்னும் உலகளாவிய விஞ்ஞானிகளுக்கு இன்னும் ஒரு மர்மமாகவும், புரியாத புதிராகவும் இருந்து வருகிறது.
ஏன் இந்த மர்மத்தை பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம் : சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான இந்த கொரோனாவில் இருந்து எப்போதும் வாயு மற்றும் துகள்களை அண்ட விண்வெளியில் வீசப்படுகிறது. இந்த துகள்களின் நகர்வை தான் சூரியகாற்று என அழைக்கின்றோம். கொரோனாவிலிருந்து வரும் இந்த துகள்கள் மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்டவை. இந்த துகள்களை ஒரு மணி நேரத்திற்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் (கொரோனாவின் அதிக வெப்ப நிலை காரணமாக ) பூமியை நோக்கி பயனிக்கின்றன.
பூமியின் காந்தப்புலமும், வளிமண்டலமும் கேடயத்தைப் போல் நின்று, இந்த சூரியக் கதிர்களை தடுக்கின்றன. இருந்தாலும், பூமியின் காந்தப்புலத்தின் நிலைத் தன்மை, அதன் நகர்வு, வேகம் இன்னும் விஞ்ஞானிகளுக்கு சவால் விடும் நிலையில் தான் உள்ளது.
எனவே, கொரோனா மர்மத்தை வானியலாளர்கள் நீண்ட காலமாக தீர்க்க முயற்சித்து வந்தாலும், இன்று அந்த பகுதியை ஆய்வு நடத்த ஓட்டு மொத்த அறிவியல் சமூகமும் காத்துக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.