Whataspp Tamil News : ஒருதலைபட்ச மாற்றங்கள் நியாயமானவை அல்ல, ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல என்று கூறி, மெசேஜிங் பயன்பாட்டின் தனியுரிமைக் கொள்கையில் சமீபத்திய மாற்றங்களைத் திரும்பப் பெறுமாறு இந்திய அரசு வாட்ஸ்அப்பைக் கேட்டுள்ளது.
வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி வில் கேத்கார்ட்டுக்கு எழுதிய கடிதத்தில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உலகளவில் வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய பயனர் தளமாக இந்தியா திகழ்கிறது என்றும் அதன் சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாகும் என்றும் கூறினார்.
வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள், “இந்தியக் குடிமக்களின் தேர்வு மற்றும் சுயாட்சிக்கான தாக்கங்கள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகின்றன” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்மொழியப்பட்ட மாற்றங்களை திரும்பப்பெறவும், தகவல் தனியுரிமை, தேர்வு சுதந்திரம் மற்றும் டேட்டா பாதுகாப்பு தொடர்பான அதன் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்யவும் அமைச்சகம் வாட்ஸ்அப்பைக் கேட்டது.
“வாட்ஸ்அப் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைகளில் ஒருதலைபட்சமாக மாற்றங்கள் நியாயமானதாகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவும் இருக்காது" என்றுகூறி இந்தியர்கள் முறையாக மதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"