வாட்ஸ் ஆப்: ‘ஹேக்’ ஆனாலும் அப்செட் ஆகாதீங்க… மீட்கும் வழி இங்கே..!

Whatsapp tips : இந்த மாதிரியான சூழலில் உங்களுடைய கணக்கை மீட்க நீங்கள் 7 நாட்கள் காத்திருக்க வேண்டியது இருக்கும்.

By: June 23, 2020, 8:53:47 PM

WhatsApp News In Tamil: வாட்ஸ்அப் மிக பிரபலமான செய்தியிடல் தளம் என்பதில் சந்தேகம் இல்லை. முகநூலால் நிர்வகிக்கப்படும் இந்த வாட்ஸ்அப் தளத்திற்கு உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர் மேலும் இது end-to-end encrypted அரட்டை அனுபவத்தையும் வழங்குகிறது. எனினும் இதன் பிரபலம் காரணமாக இது தீங்கிழைப்பவர்களால் தவறான தகவல்கள் பரப்ப பயன்படுத்தப்படுகிறது மேலும் சிலர் உங்களது பயனர் கணக்குகளுக்குள் நுழையவும் முயற்சி செய்கின்றனர்.

மோசடிக்காரர்கள் தந்திரம் செய்து வாட்ஸ் ஆப் பயனர்களின் 6 இலக்க சரிப்பார்ப்பு குறியீடை (verification code) பெற முயற்சிக்கின்றனர். வாட்ஸ் ஆப்பால் ஒரு கணக்கிற்கு உள் நுழைய பயன்படுத்தப்படும் இது அடிப்படையில் ஒரு OTP ஆகும். உங்களுடைய சரிப்பார்ப்பு குறியீடை வேறு நபர்களிடம் கொடுப்பதால் உங்களுடைய வாட்ஸ் ஆப் கணக்கு ஹேக் செய்யப்பட வாய்ப்புள்ளது.

உங்களுடைய சிம் கார்ட் அல்லது சரிப்பார்ப்பு குறியீடை யாராவது அபகரித்தால் கூட இந்த இரண்டு படிகள் மூலம் செய்யப்படும் சரிப்பார்ப்பு உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கின் பாதுகாப்பு சமரசம் செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்கிறது. இது கூடுதல் பாதுகாப்புக்கான ஒரு அடுக்கு, மேலும் இது உங்கள் வாட்ஸ் ஆப் கணக்குக்கான ஒரு கடவுச்சொல்லாகவும் இருக்கிறது. எனினும் ஒருவேளை நீங்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தாவிட்டாலும் கூட, உங்களுடைய சரிப்பார்ப்பு குறியீடை யாராவது பெற்றால் உங்களுடைய கணக்கு ஹேக் செய்யப்படலாம்.

 

whats app news in tamil

நல்வாய்ப்பாக உங்களுடைய அரட்டைகள் உங்கள் கைபேசியிலேயே சேமிக்கப்படுவதால் உங்களுடைய பழைய அரட்டைகளை ஹேக்கரால் வாசிக்க முடியாது, ஆனால் உங்களுடைய கணக்கை வேறு தவறான நோகங்களுக்காக பயன்படுத்த முடியும். அதிர்ஷ்டவசமாக, உங்கள் வாட்ஸ்அப் கணக்கைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது.

ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ் ஆப் கணக்கை எவ்வாறு மீட்பது

ஹேக் செய்யப்பட்ட வாட்ஸ் ஆப் கணக்கை மீட்க உங்கள் கைபேசி எண்ணை பயன்படுத்தி நீங்கள் மறுபடியும் உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கிற்குள் உள்நுழைய வேண்டும். குறுஞ்செய்தி மூலமாக ஒரு 6 இலக்க சரிபார்ப்பு குறியீடைப் பெறுவீர்கள், அதை உங்கள் கைபேசி தானாக வாசித்து, உங்களை உங்கள் கணக்கிற்குள் உழ் நுழைக்கும். நீங்கள் உங்கள் கணக்கிற்குள் நுழைந்ததும் ஹேக்கர் தானாக உங்கள் கணக்கிலிருந்து வெளியேறி விடுவார்.

ஒருவேளை உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கின் அணுகலைப் பெற்று ஹேக்கர் இந்த இரண்டு படி சரிப்பார்ப்பை செயல்படுத்திவிட்டால், உங்களிடம் குறியீடை உள்ளீடு செய்ய கேட்கப்படும். இந்த மாதிரியான சூழலில் உங்களுடைய கணக்கை மீட்க நீங்கள் 7 நாட்கள் காத்திருக்க வேண்டியது இருக்கும்.

உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கை எவ்வாறு பாதுகாப்பது

மோசடிகளில் (scams) இருந்து உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கை பாதுகாக்க உங்களுடைய செயல்படுத்தும் குறியீடை (activation code) யாரிடமும் பகிரக் கூடாது. மேலும் பாதுகாப்பான அனுபவத்துக்கு இரண்டு படி சரிப்பார்ப்பை செயல்படுத்த மறந்து விடாதீர்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp account stolen hack whatsapp account recover hacked whatsapp recover whatsapp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X