மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப்பிலும் ஏ.ஐ தொழில்நுட்ப அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஐ வாட்ஸ்அப் ஸ்டிக்கர்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஏ.ஐ திறன்கள் வாட்ஸ்அப் பயனர்களுக்கான தகவல்தொடர்புகளை மேம்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த ஏ.ஐ ஸ்டிக்கர்கள் மெட்டாவின் சேவையால் இயக்கப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படுகின்றன. ஸ்டிக்கருக்கான டெக்ஸ்ட் டைப் செய்தால் ஏ.ஐ மூலம் பிரத்யேக ஸ்டிக்கர் உருவாக்கப்படுகின்றன. இந்த AI ஸ்டிக்கர்கள் உங்கள் ஸ்டிக்கர் கலெக்ஷனில் சேகரித்து வைக்கப்படுகின்றன.
தற்போது இந்த அம்சம் ஆங்கில மொழி ஆதரவு மட்டுமே உள்ளது. ஏ.ஐ ஸ்டிக்கர் உருவாக்க பயனர் ஆங்கில மொழியில் டைப் செய்து பயன் பெறலாம். மேலும் இந்த அம்சம் குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
எப்படி பயன்படுத்துவது?
முதலில் போனில் வாட்ஸ்அப் சென்று ஷேட் பக்கம் சென்று ஸ்மெலி ஐகானை கிளிக் செய்யவும். அடுத்து ஸ்டிக்கர் ஐகானுக்கு செல்லவும். இப்போது "create" கொடுத்து "continue " கொடுக்கவும்.
என்ன மாதிரியான ஸ்டிக்கர் உருவாக்க வேண்டுமோ அது பற்றி டெக்ஸ்ட் டைப் செய்யவும். இப்போது ஆப் உங்களுக்கு பிரத்யேக ஸ்டிக்கர் உருவாக்கித் தரும். 4 ஸ்டிக்கர்கள் வரும் அதில் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“