scorecardresearch

பீட்டாவில் 2 ஜிபி டேட்டா பைல்களை அனுப்பும் வசதி – வாட்ஸ்அப்பின் மெகா பிளான்

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பீட்டா சோதனையில், பயனர்கள் 2 ஜிபி அளவிலான மீடியை பைல்லை அனுப்பும் வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

பீட்டாவில் 2 ஜிபி டேட்டா பைல்களை அனுப்பும் வசதி – வாட்ஸ்அப்பின் மெகா பிளான்

Wabetainfo தகவலின்படி, வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்கள் 2 ஜிபி அளவிலான மீடியை பைல்லை அனுப்பும் முயற்சியை சோதித்து வருவதாக தெரிவித்துள்ளது.

Wabeta-படி, இந்த அம்சம் தற்சமயம் (2.22.8.5, 2.22.8.6 மற்றும் 2.22.8.7 வெர்ஷனின் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கும், 22.7.0.76 வெர்ஷன் ஐஓஎஸ் பீட்டா பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அர்ஜென்டினா பயனர்களுக்கு மட்டுமே வேலை செய்கிறது.

மற்றவர்கள் அனைவரும் தற்சமயம், 100 எம்.பி அளவிலான பைல்களை மட்டுமே அனுப்பமுடிகிறது. Wabetainfo ஆல் பெறப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களின்படி, iOS சாதனத்தை பயன்படுத்தும் வாட்ஸ்அப் பயனருக்கு பைல் சைஸ் ரெஸ்ட்ரிக்ஷன் 100MB இலிருந்து 2GB ஆக மாறியுள்ளதை பார்க்க முடிகிறது. இருப்பினும், இந்த வசதியை மற்ற பகுதிகளுக்கும் வாட்ஸ்அப் விரிவுப்படுத்துமா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை.

வாட்ஸ்அப்பின் போட்டி நிறுவனமான டெலிகிராம், 1.5 ஜிபி அளவு வரையிலான பைல்களை எவ்வித தரம் வேறுபாடு குறையாமல் பயனர்கள் அனுப்பும் அம்சம் வழங்கியுள்ளது. ஆனால், வாட்ஸ்அப்பை பொறுத்தவரை, ஏற்கனவே பல அம்சங்கள் சோதனையில் இருந்தால், இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வர நேர எடுக்கும் என தெரிகிறது.

இதற்கிடையில், வாட்ஸ்அப் அண்மையில் “Linked Device’ அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ஒரே நேரத்தில் வாட்ஸ்அப் செயலியை 5 சாதனங்களில் பயன்படுத்தலாம். முக்கிய அம்சமாக, வாட்ஸ்அப் வெப் பயன்படுத்த, பிரைமரி செல்போனில் இன்டர்நெட் ஆன் -இல் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. 14 நாள்களுக்கு செல்போனில் வாட்ஸ்அப் உபயோகிக்காமல், லெப்டோப்பில் மட்டுமே உபயோகித்து வரலாம். இந்த அம்சம், முதன்முதலில் செப்டம்பர் 2021 இல் பீட்டா சோதனையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவை செயல்பாட்டுக்கு வர, ஒரு ஆண்ட ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp allowing users to share media files up to 2gb in beta test