வாட்ஸ்ஆப் ஸ்வைப் டூ ரிப்ளே புது அப்டேட் : நாம் வாட்ஸ்ஆப்பில் யாருடனாவது பேசிக்கொண்டே இருப்போம். தொடர்ச்சியாக கேள்வி கேட்கும் போது ஒவ்வொரு கேள்விக்காய் ரிப்ளே செய்வதிற்கு அந்த மெசேஜ் மீது லாங் பிரஸ் கொடுத்து ரிப்ளே சிம்பளை அழுத்தி பின்னர் பதில் கூறுவோம்.
க்ரூப் சாட்டிங் என்று வரும் போது நிலை மிகவும் மோசமாகிவிடும். நாம் யாருக்காவது பதில் கூற நினைப்போம். அதற்கு நூறு மெசேஜ்கள் வந்துவிடும். அதனை சரி செய்யும் நோக்கிலும், எளிமைப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டது தான் வாட்ஸ்ஆப் ஸ்வைப் டூ ரிப்ளே.
வாட்ஸ்ஆப் ஸ்வைப் டூ ரிப்ளே புது அப்டேட்
இந்த புதிய அப்டேட் வர இருப்பதாக ஏற்கனவே வாட்ஸ்ஆப் நிர்வாகம் கடந்த மாதம் அறிவித்திருந்த நிலையில் தற்போது பீட்டா வெர்ஷனில் இந்த புதிய அப்டேட் வெற்றிகரமாக வேலை செய்வதாக WABetaInfo இணையத்தில் அறிவித்திருக்கிறது வாட்ஸ்ஆப்.
வாட்ஸ்ஆப் ஸ்வைப் டூ ரிப்ளே புது அப்டேட்
மேலும் அந்த இணையத்தில் எப்படி ஸ்வைப் டூ ரிப்ளே வேலை செய்கிறது என்பதை விளக்கும் GIF இமேஜ் ஒன்றையும் பதிவேற்றம் செய்திருக்கிறது வாட்ஸ்ஆப் நிர்வாகம். இந்த அப்டேட் ஏற்கனவே ஆப்பிள் ஐபோன்களில் இருக்கும் வாட்ஸ்ஆப்பில் இயங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வாட்ஸ்ஆப் ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்ஷன் 2.18.300 இந்த அப்டேட் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.