ஒன்றல்ல, இரண்டல்ல…. 7 புதிய அம்சங்கள்! வாட்ஸ் ஆப் A to Z கொண்டாட்டம்

Whats App: பயனர்கள் வாட்ஸ் ஆப்பை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்மார்ட் கைபேசிகளிலும் அல்லது tablets லும் பயன்படுத்த முடியும்.

By: July 8, 2020, 8:06:39 PM

Whats App News In Tamil: முகநூலுக்கு உரிமைபட்ட இந்த வாட்ஸ் ஆப்பில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து அம்சங்களும் உலகளவில் அனைத்து பயனர்களுக்கும் விரைவில் வரும் நாட்கள் அல்லது வாரத்தில் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்பில் விரைவில் வரவிருக்கும் அம்சங்கள் குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை.

அனிமேஷன் ஸ்டிக்கர்கள் (Animated stickers)

உலகளவில் உள்ள பயனர்களுக்காக வாட்ஸ் ஆப் கடந்த வாரம் அனிமேஷன் ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியது. தற்போதைக்கு 2.8MB அளவில் உள்ள Playful Piyomaru என்ற ஒரே ஒரு அனிமேஷன் ஸ்டிக்கர் தான் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

QR codes

கைபேசி எண்ணை கேட்காமல் ஒருவரை உங்கள் வாட்ஸ ஆப்பில் சேர்ப்பதற்கான (add) ஒரு புதிய வழி. இந்த அம்சத்தின் மூலம் வாட்ஸ் ஆப் பயனர்கள் வெறுமனே ஒரு QR குறியீடை ஸ்கேன் செய்வதன் மூலம் ஒருவருடைய தொடர்பு எண்ணை சேர்த்துக் கொள்ள முடியும். நீண்ட காலத்திற்கு முன்பு இந்த QR அம்சம் Blackberry messenger ல் இருந்தது. ஏற்கனவே வாட்ஸ் ஆப் QR குறியீடை அறிமுகப்படுத்திவிட்டது.

 

Dark mode for web

கைபேசியில் Dark mode’ஐ வாட்ஸ் ஆப் முன்பே அறிமுகப்படுத்திவிட்டது. கணினியில் பயன்படுத்தக்கூடிய வலைதள பதிப்பிற்கும் இப்போது Dark mode அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஏற்கனவே உலகளவில் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கிறது. கைபேசி பதிப்பை போலவே வலைதள பதிப்பிலும் இந்த செய்தியிடல் தளம் light மற்றும் dark theme என இரண்டு ஆப்ஷனை வழங்குகிறது. வாட்ஸ் ஆப் வலைதள பதிப்பில் எவ்வாறு dark mode ஐ இயக்க வேண்டும் என்பதை இதில் பார்க்கலாம்.

வீடியோ அழைப்புகளில் (Video calls) ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்

முன்பு வாட்ஸ் ஆப்பால் சிறந்த வீடியோ அழைப்பு செய்யும் ஆப்களின் பட்டியலில் நுழைய முடியவில்லை. கோவிட்-19 காரணமாக உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட்டுள்ள இந்த காலகட்டத்தில் வீடியோ அழைப்புகளின் முக்கியத்துவம் மக்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது. புதிய பதிப்பு வீடியோ அழைப்புகளின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. ஒரு சொடுக்கில் குறிப்பிட்ட ஒரு தொடர்பின் (contact) வீடியோவை பெரிதாக்க பயனர்களை அனுமதிக்கிறது.

KaiOS gets updates too

Linux ஐ அடிப்படையாக கொண்ட mobile operating system ஆன KaiOS க்கு ஒரு புதுப்பிப்பு கிடைக்கப்போகிறது. இது ஏற்கனவே ஆண்ட்ராய்ட் மற்றும் iOS பயனர்களிடம் சில காலமாக உள்ளது. 24 மணி நேரத்துக்கு பிறகு stories கள் தானாக மறையும் அம்சம் Instagram, Facebook போன்ற ஆப்களில் பொதுவாகவே உள்ளது. அது இப்போது KaiOS க்கு வரப்போகிறது.

வாட்ஸ் ஆப்பில் விரைவில் வரவுள்ள அம்சங்கள்

பல சாதன ஆதரவு (Multi-device support)

பயனர்கள் தங்களது வாட்ஸ் ஆப் கணக்கை பல சாதனங்களில் பயனபடுத்த இந்த பல சாதன ஆதரவு அம்சம் உதவும். பயனர்கள் வாட்ஸ் ஆப்பை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்மார்ட் கைபேசிகளிலும் அல்லது tablets லும் பயன்படுத்த முடியும். இந்த அம்சம் ஏற்கனவே Telegram ல் கிடைக்கிறது. வாட்ஸ் ஆப் இந்த அம்சத்தை கடந்த சில காலமாக சோதித்து வருகிறது எனவே வரும் நாட்களில் இது வெளியிடப்படலாம்.

செய்திகளை சுயமாக அழிக்கும் வசதி (Self-destructing messages)

இந்த அம்சத்தையும் வாட்ஸ் ஆப் பல காலமாக சோதித்து வருகிறது ஆனால் இது வெளியிடப்படுவதற்கான காலகெடு எதையும் அறிவிக்கவில்லை. WhatsApp Stories அல்லது Status 24 மணி நேரம் இருந்துவிட்டு தானாக மறைந்து போவது போல இதுவும் வேலை செய்யும். பயனர்கள் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட காலம் வரை இருந்து விட்டு தானாக மறையும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Whatsapp animated stickers whatsapp news indian express news whatsapp update whatsapp qr codes

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X