ஒரு மாதத்தில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்.. என்ன காரணம்? | Indian Express Tamil

ஒரு மாதத்தில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்.. என்ன காரணம்?

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 23.24 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை தடை செய்து அந்நிறுவனம் முடக்கி உள்ளது.

ஒரு மாதத்தில் 23 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்.. என்ன காரணம்?
எல்ஐசி வாட்ஸ்அப் சேவை

மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப விதிகள், பயனர்கள் புகார்கள், போலி கணக்கு ஆகியவற்றை ஆராய்ச்சி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 23 லட்சத்து 24 ஆயிரம் கணக்குகளை முடக்கி உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 8.11 லட்சம் கணக்குகள் பயனர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என முன்கூட்டிய அறிந்து தடை செய்யப்பட்டதாக கூறியுள்ளது.

செப்டம்பரில் தடை செய்யப்பட்ட 26.85 லட்சம் கணக்குகளை விட அக்டோபரில் தடைசெய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 13 சதவீதம் குறைவாகும். அக்டோபர் 1, 2002 முதல் அக்டோபர் 31, 2022 வரை 23.24 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளது என நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளை கடுமையாக்கியது. அதன்படி, பெரிய டிஜிட்டல் தளங்கள் 50 லட்சத்திற்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட சமூகவலைதளங்கள் ஒவ்வொரு மாதமும் அறிக்கை வெளியிட வேண்டும். பயனர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டும் எனக் கூறியது. அதன் அடிப்படையில் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு அக்டோபர் மாதம் பல்வேறு காரணங்கள், விதி மீறல்களில் ஈடுபட்ட 23.24 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp bans 23 24 lakh accounts in india in october