WABetaInfo-படி, ஆண்ட்ராய்டு மற்றும் iOSக்கான வாட்ஸ்அப் பீட்டாவில் குரூப் சாட்களில் பார்வேட் மெசேஜ்களை அனுப்புவதில் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தெரியவந்துள்ளது. புதிய கட்டுப்பாடுகள், ஆண்ட்ராய்டு 2.22.7.2க்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பிலும், ஐபோனுக்கு 22.7.0.76க்கான வாட்ஸ்அப் பீட்டா பதிப்பிலும் வந்துள்ளது.
WABetaInfo வெளியிட்ட ஸ்கிரீன் ஷாட்களின்படி, forwarded என்கிற லேபல் இடம்பெற்றிருக்கும் மெசேஜை, ஒரு குரூப்புக்கு அதிகமாக பார்வேடு செய்திட முடியாது. நீங்கள் பார்வேடு செய்ய முயற்சித்தால், “Forwarded messages can only be sent to one group chat,” என்கிற வாசகம் உங்கள் வாட்ஸ்அப் திரையில் தோன்றும். நீங்கள் மீண்டும் Forwarded மெசேஜை மற்ற குரூப்புக்கு அனுப்ப வேண்டும் என்றால், மீண்டும் அந்த மெசேஜை செலக்ட் செய்துதான் அனுப்பிட முடியும்.
ஜூலை 2018 இல், பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசஞ்சர் இந்தியாவில் ஒரு கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியது. அதில் பயனர்கள் ஒரு மெசேஜை அதிகபட்சமாக ஐந்து தனிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுப்ப முடியும். பின்னர், ஜனவரி 2019 இல், இந்த கட்டுப்பாடுகள் உலகளவில் நீட்டிக்கப்பட்டன.
ஒருவருக்கு மட்டுமே அனுப்பும் பார்வேடு மெசேஜ் அம்சம், ஏற்கனவே சில பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.22.8.11 பயன்படுத்தும் அனைத்து பயனாளிகளுக்கும் வழங்கவுள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடானது, வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜில் புதிய அம்சங்களை வெளியிட்ட ஓரிரு நாளில் வந்துள்ளது. புதிய வாய்ஸ் மெசேஜ் அப்டேட்டில், சாட்விட்டு வெளியே வந்தாலும் வாய்ஸ்நோட் கேட்கும் வசதி, வாய்ஸ்மெசேஜை pass அண்ட் Resume செய்வது, அனுப்புவதற்கு முன்பு கேட்பது, ஆடியோவை ஸ்பீடாக ஓட வைப்பது போன்றவை வழங்கப்பட்டன. இதில் சில வசதிகள் ஏற்கனவே ஐஓஎஸ் தளங்களில் செயல்பாட்டில் உள்ளன.
அதற்கு முன், வாட்ஸ்அப் மல்டி டிவைஸ் சப்போர்ட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, பிரைமரி போனில் இன்டர்நெட் ஆன் செய்யாமலே, ஒரே நேரத்தில் 4 சாதனத்தில் வாட்ஸ்அப் செயலியை உபயோகிக்க முடியும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil