Whatsapp beta on android gets two new features Tamil News : சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா புதுப்பிப்பு ஆண்டிராய்டு பயனர்களுக்கு புதிய அம்சங்களைச் சேர்த்தது. ஆனால், அவை சிறிய மாற்றங்கள்தான். ஃபேஸ்புக்கிற்கு சொந்தமான இந்த நிறுவனம் வாய்ஸ் நோட் அலைவடிவங்களைச் சேர்த்தது. WaBetaInfo பகிர்ந்த ஸ்கிரீன் ஷாட்டின் படி, பயனர்கள் இப்போது வாய்ஸ் செய்தியில் ஒரு நேர் கோட்டுக்கு பதிலாக அலைவடிவத்தைக் காண்பார்கள்.
2.21.13.17 வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பதிப்பில் அனைத்து பீட்டா சோதனையாளர்களுக்கும் இந்த அம்சம் தெரியும். மேற்கோள் காட்டப்பட்டதன்படி, சில பயனர்களால் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து பிளே செய்யவும் இடைநிறுத்தவும் முடியாது. ஏனெனில், வாய்ஸ் அலைவடிவம் இருண்ட பயன்முறையில் (டார்க் மோட்) அதிகம் தெரியாது. மேலும், “வாய்ஸ் செய்தி வழியாக செல்லவும்” சற்று கடினம். இந்த அம்சம் தற்போது ஆண்டிராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. மேலும், சிக்கல்கள் சரி செய்யப்பட்டவுடன் அதை iOS-க்காக உருவாக்க முடியும்.
சமீபத்திய வாட்ஸ்அப் பீட்டா புதுப்பிப்பு, பயன்பாட்டில் உள்ள ஸ்டிக்கர் பேக்குகளை நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பும் திறனையும் சேர்த்தது. இந்த அம்சம் ஏற்கனவே ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த அம்சத்தைப் பெற்றிருக்கிறீர்களா என்று சோதிக்க விரும்புவோர், பின்னர் அவர்கள் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் ஷாப்பை திறந்து ஸ்டிக்கர் பேக்கைத் தேர்ந்தெடுக்கலாம். செய்தி பயன்பாட்டின் இமோஜி பிரிவில் இந்த ஸ்டிக்கர் ஷாப் தெரியும்.
இந்த ஷாப்பில், ஸ்டிக்கர் பேக்கின் மேலே ஒரு முன்னோக்கி (forward) பட்டனை கண்டால், உங்கள் கணக்கிற்கு இந்த அம்சம் கிடைக்கிறது என்று அர்த்தம். நீங்கள் முன்னோக்கி பட்டனை க்ளிக் செய்தால், ஸ்டிக்கர் பேக்கை அனுப்ப விரும்பும் தேர்ந்தெடுக்கப்பட்ட சாட்டில் கேட்கப்படுவீர்கள்.
தவிர, வாட்ஸ்அப் சமீபத்தில் ஆடியோ ஃபைல்களுக்கான இரண்டு புதிய பின்னணி வேகங்களைச் சேர்த்தது. இதில் 1 எக்ஸ், இயல்புநிலை, அசல் பின்னணி வேகம், 1.5 எக்ஸ் மற்றும் 2 எக்ஸ் ஆகியவை அடங்கும். இது, ஆடியோ ஃபைலை 5 அல்லது 100 சதவீத வேகத்தில் இயக்க அனுமதிக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil