வாட்ஸ்அப்பில் அசத்தல் அப்டேட்; 'லோ- லைட்' வீடியோ காலிங் அம்சம் அறிமுகம்: எப்படி பயன்படுத்துவது?

WhatsApp Low-light Video Calling mode: வாட்ஸ்அப்பில் புதிதாக லோ- லைட் வீடியோ காலிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதை ஆக்டிவேட் செய்வது பற்றி பார்ப்போம்.

WhatsApp Low-light Video Calling mode: வாட்ஸ்அப்பில் புதிதாக லோ- லைட் வீடியோ காலிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதை ஆக்டிவேட் செய்வது பற்றி பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Awhata

வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப அம்சங்களை அறிமுகம் செய்கிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் சமீபத்தில் அதன் வீடியோ கால் வசதியில் பேக்கிரவுண்ட், ஃபில்டர்ஸ் அம்சம் அறிமுகம் செய்தது.

Advertisment

இதன் தொடர்ச்சியாக இப்போது லோ- லைட் வீடியோ காலிங் அம்சம் அறிமுகம் செய்துள்ளது. 
பயனர்களின் வீடியோ காலிங் வசதியை மேம்படுத்தும் வகையில் அறிமுகம் செய்வதாக கூறியுள்ளது. அதாவது லோ- லைட் வீடியோ காலிங் என்பது வெளிச்சம் இல்லாத போதும் இந்த வசதியைப் பயன்படுத்தி நல்ல தரத்தில் வீடியோ கால் பேச அனுமதிப்பதாகும். அதாவது இந்த அம்சம் ஆக்டிவேட் செய்தால் லைட் வெளிச்சம் மேம்படுத்தி காண முடியும்.

லோ- லைட் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி?

  1. முதலில் வாட்ஸ்அப் ஆப் செல்ல வேண்டும்.
    2.  உங்கள் நண்பர், உறவினருக்கு வீடியோ கால் செய்யுங்கள்.
    3.  வீடியோ அம்சத்தை full screenக்கு மாற்றவும்.
    4. இப்போது மேலே வலப்புறத்தில் உள்ள பல்ப் போன்ற ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.
    5. இதை செய்தால் லோ- லைட் மோட் ஆக்டிவேட் ஆகும்.
Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: