Advertisment

வாட்ஸ்அப் பிராட்காஸ்ட் அம்சம் - எப்படி பயன்படுத்துவது?

Whatsapp broadcast feature how to use Tamil News நீங்கள் உருவாக்கக்கூடிய பிராட்காஸ்ட் பட்டியல்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Whatsapp broadcast feature how to use Tamil News

Whatsapp broadcast feature how to use Tamil News

Whatsapp broadcast feature how to use Tamil News : உலகெங்கிலும் உள்ள மக்களால் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான உடனடி செய்தி சேவைகளில் ஒன்றாக வாட்ஸ் அப் கருதப்படுகிறது. இந்த எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் பிளாட்ஃபார்ம், உலகம் முழுவதிலும் உள்ள பயனர்களுடன் இணைவதற்கும், படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ கிளிப்புகள் போன்ற மீடியாக்களை பகிரவும் அனுமதிக்கிறது.

Advertisment

உங்கள் தொடர்பு பட்டியலில் உள்ள பல நபர்களுக்கு ஒரே நேரத்தில் செய்தியை அனுப்ப விரும்புபவராக நீங்கள் இருந்தால், வாட்ஸ்அப்பில் இந்த ப்ராட்காஸ்ட் பட்டியலை உருவாக்குவதன் மூலம் நீங்கள் அதை அடையலாம்.

ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ் அப்பில் பிராட்காஸ்ட் பட்டியலை எவ்வாறு உருவாக்குவது?

1. ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் ஆண்டிராய்டு சாதனத்தில் வாட்ஸ்அப் பயன்பாட்டைத் திறக்கவும்.

2. திரையின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று-புள்ளி மெனுவைக் கிளிக் செய்யவும்.

3. ‘புதிய பிராட்காஸ்ட் விருப்பம்’ என்பதை க்ளிக் செய்யவும்.

4. உங்கள் பிராட்காஸ்ட் பட்டியலில் நீங்கள் சேர்க்க விரும்பும் தொடர்புகளைத் தேர்ந்தெடுக்கவும்

5. கான்டாக்ட்களைச் சேர்க்க டிக் மார்க் அடையாளத்தைக் கிளிக் செய்யவும்

6. பிராட்காஸ்ட் பட்டியலை உருவாக்கிய பிறகு, நீங்கள் இப்போது அந்த பட்டியலில் ஒரு செய்தியை அனுப்பலாம்.

பிராட்காஸ்ட் பட்டியலுக்கு ஒரு செய்தியை அனுப்பும் போது, உங்கள் எண்ணை அவர்களின் தொடர்பு பட்டியலில் சேமித்து வைத்திருக்கும் பட்டியலில் உள்ள அனைத்து பெறுநர்களுக்கும் அது அனுப்பப்படும். யாரேனும் நம்பரைச் சேமிக்கவில்லை என்றால், அவர்கள் பிராட்காஸ்ட் செய்தியைப் பெற மாட்டார்கள். பயனர்கள் இந்த செய்தியை சாதாரண வாட்ஸ்அப் செய்தியாகப் பெறுவார்கள்.

நீங்கள் உருவாக்கக்கூடிய பிராட்காஸ்ட் பட்டியல்களின் எண்ணிக்கையில் வரம்பு இல்லை. ஒவ்வொரு ஒளிபரப்பு பட்டியலிலும் 256 தொடர்புகள் வரை தேர்ந்தெடுக்க பயனர்களை வாட்ஸ் அப் அனுமதிக்கிறது.

பிராட்காஸ்ட் பட்டியலை எவ்வாறு திருத்துவது?

1. நீங்கள் திருத்த விரும்பும் பிராட்காஸ்ட் பட்டியலை க்ளிக் செய்து திறக்கவும்.

2. உங்கள் பிராட்காஸ்ட் பட்டியல் திரையின் மேல் வலது மூலையில் அமைந்துள்ள மூன்று-புள்ளி மெனுவை க்ளிக் செய்யவும்.

3. பிராட்காஸ்ட் பட்டியல் தகவல் விருப்பத்தை க்ளிக் செய்யவும்.

4. பிராட்காஸ்ட் பட்டியல் தகவல் திரையில் நீங்கள் உங்கள் ஒளிபரப்பு பட்டியலின் பெயரை மாற்றலாம், மேலும் பெறுநர்களைச் சேர்க்கலாம் மற்றும் பெறுநர்களை அகற்றலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment