வாட்ஸ் அப்பில் பரபரப்பு: பிளாக் செய்த நம்பரில் இருந்து மெசேஜ் வந்ததால் மக்கள் பீதி!

பாதுகாப்பு நடவடிக்கைகள்  எந்த அளவிற்கு  உண்மை?

நேற்றைய தினம்  வாட்ஸ் அப்பில்  பிளாக் செய்த நம்பரில் இருந்து குறிப்பிட்ட சிலருக்கு  மெசேஜ்  வந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இன்றைய தொழில் நுட்ப உலகில் வாட்ஸ் அப் இன்றியமையாத செயலியாக மாறியுள்ளது.  பெரியவர்கள் முதல் சிறியவர்கள் கையில் ஸ்மார்ட்ஃபோன் இல்லாத எவரையுமே இப்போது பார்ப்பது அரிதாகி விட்டது. அந்த அளவில்  ஸ்மார்ட்ஃபோன்கள் மக்களை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக வாட்ஸ் அப், ஃபேஸ்புக்  போன்ற செயலிகள் மக்களை  பெருமளவில்  கவர்ந்துள்ளது.  அந்த செயலிகளை அளவுக்கு அதிகமாக நம்பி  அவர்கள் செய்யும் செயல்கள் ஏராளம்.  ஃபோட்டோ,  வீடியோவில் தொடங்கி,  வீடியோ காலிங் வரை தங்களுக்கு ஏற்றார் போல் எல்லாவற்றையும் மாற்றி கொண்டுள்ளனர்.

அதே சமயம்,இந்த செயலிகளும் வாடிக்கையாளர்களின் தேவையை உணர்ந்து சில பாதிகாப்பு அம்சங்களையும் ஏற்படுத்தி தந்துள்ளன. ஆனால், உண்மையிலேயே இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள்  எந்த அளவிற்கு  உண்மை? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

காரணம், கடந்த 23 ஆம் தேதி வாட்ஸப்பை பயன்படுத்தும் நபர் ஒருவர் , தன்னுடைய  காண்டேக்(contacts)  நம்பரில் இருந்த  ஒருவரின் நம்பரை வாட்ஸ் அப்பில் பிளாக் செய்து வைத்துள்ளார். ஆனால், அதிர்ச்சி அளிக்கும் விதமாக பிளாக் செய்த நம்பரில்  இருந்து மெசேஜ் வந்துள்ளது.

இதைப்பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்து, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இதுக் குறித்து பகிர்ந்து தனது நண்பர்களிடம் உதவி கேட்டுள்ளார்.  இதற்கான ஸ்கீரின் ஷாட்டையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

வாட்ஸ் அப்பில் ஏதேனும் மாற்றம் வந்துள்ளதா? என்றும் அவர்  நண்பர்களிடம் கேட்டு குழம்பியுள்ளார்.   பிளாக் செய்த நம்பரில் இருந்து மெசேஜ் வருவது  வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இதுப்போன்ற பிரச்சனையை வாட்ஸ் அப் சந்திப்பது முதன் முறையா? என்றால் அதுவும் இல்லை. ஏற்கனவே   இதுப்போன்ற பிரச்சனை குறித்து வாட்ஸ் அப்பிடம் மறைமுகமாக முறையிடப்பட்டுள்ளது.

×Close
×Close