New Update
00:00
/ 00:00
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் பக்கத்தில் கூடுதலான ஷேட், மெசேஜ்களை பின் செய்யும் வகையில் அப்டேட் செய்யப்படுகிறது.
இது தற்போது வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் (2.24.6.15)-ல் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி புதிய அப்டேட்டில் வாட்ஸ்அப் முதன்மை பக்கத்தில் 5 ஷேட், 3 மெசேஜ்களை பின் செய்து கொள்ள முடியும். தற்போது வரை அதிகபட்சமாக 3 ஷேட், ஒரு மெசேஜ் மட்டுமே பின் செய்ய முடியும். முக்கியமான நபர்களின் ஷேட்களை உடனடியாக பயன்படுத்த இந்த அம்சம் உதவுகிறது.
📝 WhatsApp beta for Android 2.24.6.15: what's new?
— WABetaInfo (@WABetaInfo) March 13, 2024
WhatsApp is rolling out a feature to pin multiple messages, and it's available to some beta testers!https://t.co/MAC6sucmYw pic.twitter.com/a1NlJKwK51
வாட்ஸ்அப் ஷேட் பின் செய்வது எப்படி?
இதற்கு முதலில் வாட்ஸ்அப் பக்கம் சென்று எந்த ஷேட்டை பின் செய்து டாப் பக்கத்தில் வைக்க வேண்டும் எனத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து அந்த ஷேட்டை long-press செய்து pin ஆப்ஷன் செலக்ட் செய்யவும்.
வாட்ஸ்அப் மெசேஜ் பின் செய்வது எப்படி?
வாட்ஸ்அப் மெசேஜ் பின் செய்யவும் இதே போல் தான் செய்ய வேண்டும். இது ஒருவருடைய ஷேட் மெசேஜின் டாப்-ல் பின் செய்யப்படும். முக்கியமான ஒரு மெசேஜை long-press செய்து பின் செய்யலாம். இது 30 நாட்கள் வரை ஷேட்டில் பின் செய்யப்பட்டிருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.