மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் புதிதாக வாட்ஸ்அப் சேனல் அலர்ட்ஸ் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
சேனல் அம்சம் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உங்கள் சேனல் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது அதை திரும்ப பெறவும் இந்த அம்சம் வழிவகை செய்கிறது. உங்கள் சேனல் வசதியை திரும்ப பெற இந்த வசதி மூலம் நீங்களே வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மெசேஜ் செய்ய முடியும்.
சேனல் அம்சம் பயன்படுத்துபவர்கள் இந்த ஆப்ஷனை எனெபிள் செய்து வைப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதாவது விதி மீறல் இருந்தால் உடனே இது சுட்டிக் காட்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த அப்டேட்டோடு 2 புதிய வசதிகளும் கூடுதலாக சேர்க்கப்படுகிறது. அதாவது ஷேட் பக்கத்தில் ழே ஸ்க்ரோல் செய்யும் போது னேவிக்கேஷன் லேபிள் அம்சத்தை ஆட்டோமேடிக்காக மறைக்கும். மேலும், தேதி வாரியாக மெசேஜ்களை படிக்கவும் இந்த அம்சம் உதவியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“