மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. 2023-ம் ஆண்டு ஏராளமான வசதிகளை அறிமுகம் செய்தது. பயனர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சற்று ஷாக் கொடுக்கும் வகையிலான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆண்ட்ராய்டு பயனர்கள் வாட்ஸ்அப் சேட் பேக்அப் வசதியை கூகுள் டிரைவ் ஸ்பேஸில் Add-ஆகாதபடி பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் நிறுவனத்தின் புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி வாட்ஸ்அப் சேட் பேக்அப் இனி கூகுள் டிரைவ் ஸ்டோரேஜில் சேகரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் சேட் பேக்அப் (ஆடியோ, வீடியோ, டெக்ஸ்ட் ஃபைல்கள்) என அனைத்தும் கூகுள் டிரைவ்வில் சேமிக்கப்படும். அது உங்களுடைய கூகுள் டிரைவ் ஸ்பேஸ் கணக்கில் சேரும்.
இந்த அம்சம் சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டின் முதல் பாதியில் ஆண்ட்ராய்டு வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இந்த மாற்றம் வரும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து 30 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. நோட்டிவிக்கேஷன் ‘Chat’ செட்டிங்க்ஸ் ‘Chat Backup’ பக்கத்தில் இதுகுறித்து தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளது.
எனினும் தொடர்ந்து நீங்கள் வாட்ஸ்அப் சேட் பேக் அப் விரும்பினால், போட்டோஸ், வீடியோகக்களை தவிர்த்து டெக்ஸ்ட் சேட் மட்டும் பேக்அப் எடுத்துக் கொள்ளலாம். இது உங்களுடைய ஜி டிரைவ் ( GDrive) ஸ்பெஸை மிச்சப்படுத்தும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“