மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் நாடு முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில் ஷேட் பேக் அப் வசதியில் புதிய விதிமுறைகளை அப்டேட் செய்துள்ளது. அதன்படி, கூகுள் ட்ரைவ்-ல் இனி இலவசமாக ஷேட் பேக் அப் செய்ய முடியாது. அது உங்கள் கூகுள் கணக்கு சேமிப்பகத்துடன் கணக்கிடப்படும்.
இந்த புதிய அம்சம் ஏற்கனவே பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. எனினும் இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிதாக இருக்கலாம். ஆப்பிள் பயனர்களுக்கு ஏற்கனவே இந்த வசதி உள்ளது. ஆப்பிள் பயனர்கள் ஐகிளவுட்டில் 5ஜிபி வரை மட்டுமே இலவசமாக பேக் அப் செய்ய முடியும்.
கூகுள் தற்போது ஒவ்வொரு அக்கவுண்டிலும் 15 ஜிபி இலவச கிளவுட் சேமிப்பை வழங்குகிறது. இது ஜிமெயில், கூகுள் போட்டோஸ் மற்றும் பிற சேவைகளிலும் பகிரப்படுகிறது.
ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள், டெக்ஸ்ட் மெசேஜ் உடன் மீடியா பைல்ஸ் பேக்அப் செய்யும் பயனர்கள் கூகுள் ஒன் (Google One) சந்தாவைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும்.
எனினும் இலவசமாக பேக் அப் செய்ய கூகுள் ட்ரைவ்வில் 15ஜிபி ஸ்டோரேஜை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மேலும், வாட்ஸ்அப் பயனர்களை மீடியா (புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்) இல்லாமல் குறுஞ்செய்திகளை மட்டுமே பேக் அப் எடுக்க அனுமதிக்கிறது, இதனால் ஸ்டோரேஜ் அளவை குறைவாக பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“