scorecardresearch

வாட்ஸ்அப்பில் சாட் பில்டர் அறிமுகம்…. இனி மெசேஜ் தேடுறது ரொம்ப ஈஸி

whatsapp new update: வாட்ஸ்அப் நிறுவனம் சாட், மெசேஜ்களை எளிதாக கண்டறியும் வகையில், புதிதாக சாட் பில்டரை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ்அப்பில் சாட் பில்டர் அறிமுகம்…. இனி மெசேஜ் தேடுறது ரொம்ப ஈஸி

whatsapp chat filter update: வாட்ஸ்அப் நிறுவனம் அவ்வப்போது புதிய வசதிகளை, வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது பிசினஸ் கணக்கு வைத்திப்பவர்கள், எளிதாக மற்றவர்களுடன் கலந்துரையாட புதிய சாட் பில்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. அது குறித்த முழு விவரம் இதோ..

WABetaInfo தகவலின்படி, இந்த புதிய சாட் பில்டர் , டெஸ்க்டாப், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்களுக்கு வருகிறது. இந்த ஆப்ஷன் மூலம் சாட்களை எளிதாக கண்டறியலாம். அதில், unread chats, contacts, non-contacts and groups என நான்கு விதமான ஆப்ஷன் வழங்கப்படுகின்றன.

ஸ்கிரீன்ஷாட் படி, டெஸ்க்டாப்பில் சேர்ச் பாரை டேப் செய்ததும், பில்டர் பட்டன் பிசினஸ் கணக்குகளில் தெரியவரும்.

எதிர்காலத்தில், இந்த வசதி சாதாரண பயனர்களுக்கு வழங்கப்படலாம். ஆனால் ஒரே வித்தியாசம் என்னவென்றால், நீங்கள் சாட் அல்லது மெசேஜை தேடாத சமயத்தில், பில்டர் பட்டன் திரையில் இடம்பெற்றிருக்கும்.

சாட் பில்டர் ஆப்ஷன் தற்போது பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா v2.2216.40 பயனர்கள், இச்செயலியை பயன்படுத்துகின்றனர்.

இந்த அம்சமானது வாட்ஸ்அப் பிசினஸின் நிலையான பதிப்புகளுக்கு விரைவில் வர உள்ளது, இதுதவிர குயிக் ரிப்ளை அம்சமும் அடுத்ததாக வரவிருக்கிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp chat filter for business account

Best of Express