மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. வாட்ஸ்அப் இன்ஸ்டண்ட் மெசேஜிங் செயலியாகும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் நிறுவனம் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக தனியுரிமை பாதுகாப்பு குறித்த பல அம்சங்களை வெளியிடுகிறது.
இந்த வரிசையில் தற்போது தனி நபர் சேட்-ஐ லாக் செய்து கொள்ளும் படி அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. FingerPrint கொண்டு
சேட்-ஐ லாக் செய்து கொள்ளும் படி அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது வாட்ஸ்அப் சேட்-யை லாக் செய்து hide செய்து கொள்ளலாம். FingerPrint பயன்படுத்தினால் மட்டுமே அந்த சேட்-ஐ மீண்டும் திறக்க முடியும்.
வாட்ஸ்அப் சேட்-ஐ hide செய்வது எப்படி?
Step 1: முதலில் வாட்ஸ்அப் சேட் பக்கத்திற்கு செல்லவும்.
Step 2: நீங்கள் லாக் செய்ய விரும்பும் சேட் பக்கத்திற்கு சென்று, அந்த சேட்-யை long press செய்து archive செய்யவும்.
Step 3: பின்னர் வாட்ஸ்அப் செட்டிங்க்ஸ்> பிரைவசி> Scroll down செய்து FingerPrint கொடுத்து அதை எனேபில் செய்யவும். இப்போது சேட் லாக் செய்யப்படும். FingerPrint கொண்டு மீண்டும் வாட்ஸ்அப் ஓபன் செய்து பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“