scorecardresearch

வாட்ஸ்அப்பில் இதை கவனிச்சீங்களா? டிப்ஸ், ட்ரிக்ஸ் இங்கே தெரிஞ்சுகோங்க!

WhatsApp chat tips and tricks: வாட்ஸ்அப்பில் இருக்கும் பல வசதிகளை பெரும்பாலானோர் பயன்படுத்தி இருக்க மாட்டோம். ஏன் அதுபற்றி தெரிந்திருக்க கூட மாட்டோம். இங்கு வாட்ஸ்அப்பில் நீங்கள் அறியாத சில வசதிகளைப் பற்றி பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் இதை கவனிச்சீங்களா? டிப்ஸ், ட்ரிக்ஸ் இங்கே தெரிஞ்சுகோங்க!

வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். வாட்ஸ்அப் நிறுவனம் தங்கள் பயனர்களுக்கு அவ்வப்போது புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும் பல அம்சங்கள் பற்றி பலருக்கும் தெரிவது இல்லை. அந்தவகையில் வாட்ஸ்அப்பில் இருக்கும் சில வசதிகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

குரூப்பில் இருந்து தனிப்பட்ட முறையில் ரிப்ளை

வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து தனிப்பட்ட முறையில் சம்பந்தப்பட்ட நபருக்கு பதிலளிக்கலாம். குரூப் சேட்டில் ஒருவர் கேள்வி எழுப்பினால் அவருக்கு இந்த ஆப்ஷன் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் பதிலளிக்கலாம்.

எப்படி செய்வது?

ஆண்ட்ராய்டு போனில், இந்த ஆப்ஷனைப் பயன்படுத்த குரூப் சேட்டில் கேட்கப்பட்ட கேள்வியை அழுத்திப் பிடிக்கவும். பின் வலதுபுறத்தில் உள்ள மூன்று-புள்ளி ஐகானைத் செலக்ட் செய்து Reply Privately என்ற ஆப்ஷனை கொடுக்கவும். பின்னர் அந்த மெசேஜ்கான ரிப்ளையை டைப் செய்து அனுப்பவும். அவ்வளவு தான்.

Send a voice message hands-free

நீங்கள் அதிகமாக வாய்ஸ் மெசேஜ் அனுப்புபவர் என்றால் இந்த ஆப்ஷன் உங்களுக்குத்தான். வாய்ஸ் மெசேஜ் செய்ய வாட்ஸ்அப் சேட் பக்கத்தில் உள்ள மைக் ஐகானை அழுத்தி தொடர்ந்து பேசிய மெசேஜ் அனுப்ப வேண்டும். சில நேரங்களில் தவறுதலாக மைக் ஐகானை அழுத்தாமல் விட்டால் பாதி மெசேஜ் மட்டும் சென்று விடும். இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு ஆப்ஷன் உள்ளது.

எப்போதும் போல் சேட் பக்கம் சென்று மைக் ஐகானை hold செய்து ஸ்வைப் செய்யவும். இப்போது recording செய்யலாம். இந்த ஆப்ஷனில் இடையில் நிறுத்தலாம், preview செய்யலாம், டெலிட் செய்யலாம்.

உங்கள் தொனியை நீங்கள் எளிதாகப் பெற முடியாது என்பதால் உரைச்செய்தல் பேச்சிலிருந்து வேறுபடுகிறது. சில வார்த்தைகள் வலியுறுத்தப்பட வேண்டியிருக்கலாம், மேலும் தொப்பிகளும் நிறுத்தற்குறிகளும் எப்போதும் பொருந்தாது. இந்த விஷயத்தில், வாட்ஸ்அப் உங்களை தடிமனான, சாய்வு மற்றும் ஸ்ட்ரைக்த்ரூ டெக்ஸ்ட் எடிட்டிங் அம்சங்களுடன் உள்ளடக்கியுள்ளது.

Send bold or italic text

ஒருவரிடம் நேரில் பேசும் போது உங்கள் உணர்ச்சிகள், பேசும் தொனியை காண்பிக்கலாம். ஆனால் மெசேஜில் அதை செய்ய முடியாது என்று நினைப்போம். அது தான் இல்லை. வாட்ஸ்அப் மெசேஜில் இதைச் செய்யலாம். bold or italic text அனுப்பலாம்.

வார்த்தையின் இருபுறமும் (*) ஐகான் சேர்த்தால் அந்த வார்த்தை bold ஆகிவிடும். அதே underscore (_) சேர்த்தால் italic ஆகவும், tildes (~) சேர்ந்தால் ஸ்ட்ரைக்த்ரூ (strikethrough) எழுத்து அடிக்கப் பட்டுவிடும்.

Clear all chats

வாட்ஸ்அப்பில் ஸ்டோரேஜ் பிரச்சனை காரணமாக சேட்களை டெலிட் செய்ய விரும்பினால், அதை எளிதில் செய்யலாம். Settings > Chats > Delete All Chats கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட நபர்களின் சேட்டை நீக்க வேண்டும் என்றால் அந்த நபரின் சேட் பக்கம் சென்று வலப்புறம் கிளிக் செய்து டெலிட் ஆப்ஷன் கொடுக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Whatsapp chat tips and tricks you may not know about