வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அப்டேட்கள் வெளியிடப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஷேட் இன்டர்ஃபேஸில் அப்டேட் வெளியிடப்பட உள்ளது. அதாவது புதிய இன்டர்ஃபேஸில் அனைத்தும் பச்சை நிறத்தில் இடம் பெற உள்ளது.
இந்த அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் குறிப்பிட்ட பயனர்களுக்கு ஆப்பிள், ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதிய அப்டேட்டில் நிறம், ஐகான்கள், ஸ்பேஸிங் என அனைத்தும் சில வகையில் மாற்றப்பட்டுள்ளது. இது பயனர்களுக்கு மார்டன் மற்றும் புதிய அனுபவத்தை தரும் எனக் நிறுவனம் கூறியுள்ளது.
புதிய அப்டேட்டில் Dark Mode மேலும் டார்க்காக உள்ளது. அதே போல் Light Mode-ல் UI-ல் அதிகம் வெள்ளை நிறம் இடம்பெறுகிறது. வாட்ஸ்அப் முழுவதும் அதன் பிராண்டின் நிறத்திற்கு ஏற்றது போல் பச்சை நிற shade உள்ளது. சில ஐகான்கள், பட்டன்கள், டிசைன் கூட வித்தியாசமாகத் தெரிகிறது. வாட்ஸ்அப்பின் சில பகுதிகள் முன்பை விட அதிக இடைவெளியில் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அம்சம் படிப்படியாக அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“