மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ‘கம்யூனிட்டிஸ்’ அம்சத்தில் புதிய அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கம்யூனிட்டிக்குள் நிகழ்ச்சிகளை கிரியேட் செய்து, அழைப்புகளை அனுப்பலாம். மேலும் அட்மின் பதிவிடும் குறிப்பிட்ட மெசேஜ்களுக்கு பதில் அளிக்கலாம்.
வாட்ஸ்அப் கம்யூனிட்டிஸ் அம்சத்தை நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தியது. ஒரு கம்யூனிட்டி மூலம் இனி 100 குரூப் வரை உருவாக்கலாம். மேலும் யார் வேண்டுமானாலும் இலவசமாக கம்யூனிட்டி அம்சத்தை கிரியேட் செய்யலாம்.
கம்யூனிட்டியில் உள்ள எந்த உறுப்பினரும் நிகழ்வை உருவாக்க முடியும், மற்றவர்கள் பதிலளிக்கலாம், இது குழுவின் தகவல் பக்கத்தில் தெரிவிக்கப்படும். மேலும் நிகழ்வு நடைபெறும் தேதி வரும் பொழுதும் அழைப்பை ஏற்றுக்கொண்ட பயனர்களுக்கு automatic reminder கொடுக்கப்படும்.
சமீபத்திய புதுப்பிப்பு மூலம், நிர்வாகிகள் மூன்றாம் தரப்பு பயன்பாடு அல்லது இயங்குதளம் தேவையில்லாமல் நேரடியாக வாட்ஸ்அப்பில் நிகழ்வுகளைத் திட்டமிடலாம். கூடுதலாக, பயனர்கள் நிகழ்வு அழைப்பிற்கு பதிலளிக்கலாம். இந்த அம்சம் விரைவில் பயனர்களின் பயன்பாட்டிற்கு வரும் என மெட்டா கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“