வாட்சப் பயன்பாட்டை மேலும் எளிமையாக்க இத்தனை அம்சங்களா...

hidden WhatsApp tricks for users : நீங்கள் வாட்சப் செயலியை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் என்றால், கீழ்காணும் விசயங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.....

Top WhatsApp Hidden Tips : பேஸ்புக் நிறுவனத்தின் வாட்சப் செயலியை, இந்தியாவில் மட்டும் 400 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். ஒரேநேரத்தில் பல்வேறு நபர்களுக்கு குறுந்தகவல்களை மட்டும் அனுப்புவதாக துவங்கப்பட்ட இந்த வாட்சப் செயலி, தற்போது, நிலைத்தகவல்களை ( ஸ்டேட்டஸ்) அப்டேட் செய்ய, ஸ்டிக்கர்களை பகிர, வீடியோ அழைப்புகள் என பல்வேறு அம்சங்களுடன் தங்களது பயனாளர்களை மகிழ்வித்து வருகிறது.
நீங்கள் வாட்சப் செயலியை தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் என்றால், கீழ்காணும் விசயங்கள் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்…..

வாட்சப் நிலைத்தகவல் டவுன்லோட்

இன்ஸ்டாகிராமை போலவே, வாட்சப்பும், தனது பயனாளர்களுக்கு வீடியோவை ஸ்டேட்டஸ் ஆக வைக்க அனுமதித்து வருகிறது. இதற்காக, தாங்கள், பிளேஸ்டோரில் ஸ்டேட்டஸ் டவுன்லோடர் என்ற செயலியின் மூலம், படங்கள் மற்றும் வீடியோக்களை உங்கள் போனிலேயே டவுன்லோடு செய்து உடனடியாக வாட்சப்பில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
Files app என்ற செயலியின் மூலம், ES File Explorer app டவுன்லோடு செய்து, படங்கள் மற்றும் வீடியோ ஸ்டேட்டஸ்களை பகிரலாம்.

மெமரி அடிக்கடி நிரம்பிவிடுகிறதா?

வாட்சப் பயன்படுத்துபவர்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்னை யாதெனில், போன் ஸ்டோரேஜ் நிரம்பிவிடுவதுதான். இதற்கு தீர்வு யாதெனில், போனின் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று அதனுள் Open Data and storage usage பிரிவில் Storage usage சென்று அனுப்பிய மற்றும் பெற்ற வீடியோக்களை அவ்வப்போது அழித்து விடுவதுதான்.

Make WhatsApp data friendly

குறைந்த டேட்டாவிலேயே வாட்சப் இயக்கவேண்டுமென்பது அனைவரின் விருப்பம் தான். அதற்கு அவர்கள் செய்யவேண்டியது எல்லாம். media auto-download ஆப்சனை disable பண்ணிவைப்பது மட்டுமே சிறந்தவழி.

Format texts

வாட்சப் ஸ்டேட்டஸ்களில், நாம் வார்த்தைகளை வேறுபடுத்தி காட்ட இந்த வழிமுறைகளை பின்பற்றலாம். ஸ்டேட்டஸ்சில் இடம்பெற்ற எழுத்துகள் தடித்து தெரிய *example* இத்தாலிக் மோடிக் தெரிய _example_அடிக்கோடிட்டு காட்ட ~example~ இந்த நுணுக்கங்களை பயன்படுத்தலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close