அண்மையில் தி வேர்ஜ் தளத்திற்கு பேட்டியளித்த வாட்ஸ்அப் சிஇஓ வில் காத்கார்ட், விரைவில் ஐபாட் பயனாளிகளுக்கு வாட்ஸ்அப் செயலி கிடைக்கக்கூடும். இதனை நீண்ட நாள்களாக எதிர்பார்த்து ஆலவோடு காத்திருக்கும் பயனாளிகளுக்காக அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராம் போலவே, வாட்ஸ்அப் செயலியும் ஐபாட்டில் வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. தற்போது, ஐபாட்டில் வாட்ஸ்அப் பயன்படுத்த ஏதெனும் பிரவுசரில் லாகின் செய்ய வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும், அவை பயன்பாட்டிற்கு எளிதானவை கிடையாது. வில் காத்கார்ட் ஐபாட் வாட்ஸ்அப் அறிமுக தேதியயை அறிவிக்கவில்லை. ஆனால், அதற்கான அடிப்படை தொழில்நுட்ப வேலைகள் முடிந்ததாக தெரிவித்துள்ளார்.
ஐபாட் வாட்ஸ்அப்பில் என்ன எதிர்ப்பார்கலாம்
டெஸ்க்டாப் வேர்ஷன் வாட்ஸ்அப் செயலியை, ஐபாட்டிலும் எதிர்ப்பார்க்கலாம். டார்க் மற்றும் லைட் மோட் கொண்ட தீம் வசதிகளும், சாட்களுக்கு பிரத்யேக வால்பேப்பர் வைக்கும் வசதியும் உள்ளது. புதிதாக மல்டி டிவைஸ் சப்போர்ட் இருப்பதால், பயனாளிகள் QR கோட் ஸ்கேன் செய்து தான் முதன்மை மொபைல் வழியாக கனக்கெட் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.
பெமேண்ட் வசதி, மெசேஜ் மறையும் வசதி போன்றவை கிடைக்கவுள்ளது. விரைவில் ஐஓஎஸ் தளத்திற்கு ஆடியோ மெசேஜில் பாஸ் செய்யும் வசதியும் வரவுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil