Advertisment

இனி வாட்ஸ்அப்பில் உயர் ரெசல்யூஷன் வீடியோக்களை அனுப்பலாம்!

Whatsapp could soon let send videos in high resolution 4K மற்றும் 8K கிளிப்கள் போன்ற உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோக்கள் இன்னும் ஒருவித சுருக்கத்தை எதிர்கொள்ளக்கூடும்.

author-image
WebDesk
New Update
Whatsapp could soon let send videos in high resolution Tamil News

Whatsapp could soon let send videos in high resolution Tamil News

Whatsapp could soon let send videos in high resolution Tamil News : வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட வீடியோக்கள் பல ஆண்டுகளாக மோசமான தரத்திற்கு ஒத்ததாக இருக்கின்றன. அனுப்பும் வீடியோக்கள் மற்ற தரப்பினரை விரைவாக சென்றடைவதை உறுதிசெய்ய, கடுமையான சுருக்க வழிமுறைகளை செயல்படுத்துகிறது. இது வீடியோவின் தரத்தில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இருப்பினும், எதிர்கால வாட்ஸ்அப் புதுப்பித்தலுடன் அது விரைவில் மாறக்கூடும்.

Advertisment

இந்த உடனடி தகவல்தொடர்பு பயன்பாட்டிற்கு ஒரு புதிய அம்சத்தை கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இது, வீடியோ பதிவேற்றத் தரத்தைத் தேர்ந்தெடுக்கப் பயனர்களை அனுமதிக்கும். WABetaInfo-ன் அறிக்கை, பயனர்கள் விரைவில் ‘சிறந்த தரம்’ பயன்முறை, ‘டேட்டா சேவர்’ பயன்முறை மற்றும் நீங்கள் பகிரும் வீடியோ கிளிப்களின் தரத்தை நிர்ணயிக்கும் ஆட்டோ பயன்முறை ஆகியவற்றிற்கு இடையே தேர்வு செய்ய முடியும் என்று தெரிவிக்கிறது.

உயர் தரமான வீடியோக்களை அனுப்பப் பிற சேவைகளை நாடுகின்ற பல பயனர்களுக்கு இந்த தேர்வு முக்கியமானதாக இருக்கும். எல்லா பயனர்களுக்கும் தேதி அல்லது நேரத்திற்குக் கட்டுப்பாடுகள் இல்லை. ஆனால், தரமிறக்கப்பட்ட கிளிப்புகளைப் பொருட்படுத்தாமல் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு டேட்டா சேமிப்பு மற்றும் நல்ல தரமான வீடியோக்களுக்கு இடையேயான தேர்வை வழங்கும்.

‘சிறந்த தரம்’ பயன்முறையின் கட்டுப்பாடுகள் ஏதேனும் இருக்கிறதா என்பது இன்னும் தெரியவில்லை. அசல் வீடியோ தெளிவுத்திறனை இந்த பயன்முறை எப்போதும் வைத்திருக்கும் என்று வெளியாகியிருக்கும் செய்தி வலுவாகப் பரிந்துரைக்கவில்லை. 4K மற்றும் 8K கிளிப்கள் போன்ற உயர் தெளிவுத்திறன் கொண்ட வீடியோக்கள் இன்னும் ஒருவித சுருக்கத்தை எதிர்கொள்ளக்கூடும்.

இந்தப் புதிய அமைப்பு ஒரு பொதுவானதாக இருக்கும். மேலும். இது எல்லா வீடியோக்களிலும் செயல்படுத்தப்படும். ஆகவே, இப்போதைக்கு, நீங்கள் தரவு சேமிப்பு பயன்முறையில் இருந்துகொண்டு, ஒரு கிளிப்பை உயர்-ரெசல்யூஷனில் அனுப்ப விரும்பினால், நீங்கள் அமைப்புகளுக்குச் செல்ல வேண்டும். அங்கு, உங்கள் வீடியோ பதிவேற்ற விருப்பத்தை மாற்றி, பின்னர் அந்த கிளிப்பை அசல் பயன்முறைக்கு மாற்றி அனுப்பவும். இந்த அம்சம் இன்னும் வளர்ச்சியில் உள்ளது மற்றும் எதிர்கால புதுப்பிப்பில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment