வாட்ஸ்அப் நிறுவனம், வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையான Contact list-இல் இல்லாத நம்பர்களுக்கு மெசேஜ் அனுப்பும் வசதியை, தற்போது நிஜமாக்கியுள்ளது. விரைவில், அந்த மாற்றம் செயல்பாட்டுக்கு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த வசதியை புதிய ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் 2.22.8.11, வாட்ஸ்அப் சோதனை செய்து வருவது உறுதியாகியுள்ளது. கிடைத்த தகவலின்படி, சாட்டில் இருக்கும் நம்பரை கிளிக் செய்ததும், சில ஆப்ஷன்களை தோன்றும் வகையில் சாட் பபுள் ஓபன் ஆகிறது. அதில் ஒன்று, குறிப்பிட்ட நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் அம்சம் உள்ளது.
இதுதவிர, Dial மற்றும் Add to Contacts ஆப்ஷன்களும் இடம்பெற்றிருக்கும். தற்போது வாட்ஸ்அப்பில், சாட்டில் இருக்கும் நம்பரை கிளிக் செய்தால், அது தானாகவே செல்போன் டையலர் திரைக்கும் செல்வது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் புதிய அம்சத்தில் இருக்கும் ஒரே பிரச்னை, சாட்டில் உள்ள நம்பருக்கு மட்டுமே மெசேஜ் அனுப்ப முடியும். அதாவது, உங்களுக்கு யாராவது நம்பர் அனுப்பியிருக்க வேண்டும் அல்லது நீங்கள் அந்த நம்பரை யாருக்காவது அனுப்பியிருக்க வேண்டும்.
இந்த வசதி பீட்டா பயனர்களுக்கு மட்டுமே முதலில் வழங்கப்படுகிறது. சில நாள்களுக்கு பிறகே, சாதாரண வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் என தெரிகிறது. அதுவரை, வாட்ஸ்அப்பில் சேவ் செய்யாத நம்பருக்கு மெசேஜ் அனுப்ப ஒரு வழி மட்டுமே உள்ளது. நீங்கள் உங்கள் பிரவசரில் https://wa.me/phonenumber என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.அதில், ‘phonenumber' உள்ள இடத்தில், நீங்கள் மெசேஜ் செய்ய விரும்ப நினைக்கும் எண்ணை பதிவிட வேண்டும்.
வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தில் கட்டுப்பாடு
வாட்ஸ்அப் நிறுவனம், பார்வேர்ட் மெசேஜை ஒரு நேரத்தில் ஒரு குரூப்-க்கு மேல் அனுப்பமுடியாத அம்சத்தை சோதித்து வருகிறது. முன்பு, ஒரே நேரத்தில் ஐந்து குரூப் வரை பார்வேர்ட் மெசேஜை அனுப்பிட முடியும். புதிய அப்டேட் மூலம், நீங்கள் பார்வேர்ட் லேபல் உள்ள மெசேஜை ஒரு குரூப்புக்கு மேல் அனுப்ப வேண்டும் என்றால், மீண்டும் சாட்டிற்கு சென்று தான் அனுப்ப முடியும்.
சோதனையில் இருக்கும் இந்த அம்சம், WhatsApp பீட்டா பதிப்பு 2.22.7.2 இல் வரவுள்ளது. இது, நிலையான வாட்ஸ்அப் பதிப்பில் வருவது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil