/tamil-ie/media/media_files/uploads/2020/03/template-2020-03-04T091323.226.jpg)
whatsapp dark mode, how to enable whatsapp dark mode, how to turn on whatsapp dark mode, whatsapp dark mode android, whatsapp dark mode iphones, whatsapp dark mode ios, whatsapp update, whatsapp news
How to Enable WhatsApp Dark Mode: ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன்களில் டார்க் மோட் வசதியை, வாட்ஸ் அப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப் பயனாளர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்து காத்திருந்த டார்க் மோட் வசதி, அதிகாரப்பூர்வமாக ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட், மார்ச் 3ம் தேதி இரவு வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலையாகவே இந்த அப்டேட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட் குறித்த அறிவிப்பு கிடைக்கப்பெறாதவர்கள், விரைவில் அறிவிப்பு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,
வாட்ஸ் அப் செயலியில் டார்க் மோட் அப்டேட் கிடைக்கப்பெற்றவர்கள் அதை எவ்வாறு ஆக்டிவேட் செய்வது என்பதை பின்வரும் படிகளில் தெரிந்து கொள்ளலாம்.
ஆண்ட்ராய்டில் டார்க் மோட் Enable செய்வதற்கான வழிமுறை
வாட்சப் செயலியை அப்டேட் செய்துகொள்ளவும்
புதிய அப்டேட் வரவில்லையென்றால், வரும்வரை காத்திருக்கவும்.
அப்டேட் கிடைக்கப்பெற்றவர்கள், வைபை நெட்வொர்க்கின் உதவியுடன் புதிய அப்டேட்டை, தங்களது ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.
பின் போன் செட்டிங்கினுள் சென்று, டிஸ்பிளே அண்ட் பிரைட்னஸ் ஆப்சனில், டார்க் மோட் என்பதை தெரிவு செய்யவும்.
ஆண்ட்ராய்ட் 10 மற்றும் ஐஓஎஸ்13 வகையிலான போன்களில், இந்த வழிமுறையை பின்பற்றவும்.
ஆண்ட்ராய்ட் 9 அல்லது அதற்கு கீழான ஆபரேடிங் சிஸ்டங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் எனில், வாட்ஸ் அப் செட்டிங்கினுள் சென்று அதில் சாட் - தீம்- அதில் டார்க் ஆப்சனை தெரிவு செய்யவும்.
ஐபோனில் டார்க் மோட் Enable செய்வதற்கான வழிமுறை
ஐஓஎஸ் 13 வகை போன்களில் தற்போது இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஐபோன் பயனாளர்கள், போன் செட்டிங்கினுள் சென்று, டிஸ்பிளே அண்ட் பிரைட்னஸ் ஆப்சனில், டார்க் மோட் என்பதை தெரிவு செய்யவும்.
வாட்ஸ் அப் டார்க் மோட் : எந்தவிதத்தில் பயன்தரும்?
ஸ்மார்ட்போன்களில் readabilityயை மேம்படுத்தும் விதத்தில், இந்த வாட்ஸ் அப் டார்க் மோட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமான குறிப்புகளை தனித்துக்காட்ட பிரத்யேக நிறங்கள் மற்றும் டிசைன்களை பயன்படுத்திக்கொள்ள இந்த டார்க் மோட்டில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பயனாளர்கள் அதிக நேரம் தங்களது போன்களில் நேரத்தை செலவழிப்பதால், அவர்களின் கண்கள் எளிதில் சோர்வடையாமல் இருக்க இந்த வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, வாட்ஸ் அப் நிறுவனம் தனது வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, வாட்ஸ் அப் செயலியில், டார்க் மோட் வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது பல்லாயிரக்கணக்கான பயனாளர்களின் கோரிக்கையாக இருந்தது. இந்த டார்க் மோட்டின் மூலம், கண்கள் விரைவில் சோர்வடைவது தடுக்கப்படுகிறது. குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில், நம் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் அதேசமயம் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தும் விதத்தில், குறைந்தஅளவு ஒளியில் இது இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்னொரு முக்கியமான அம்சம் யாதெனில், இந்த புதிய அப்டேட்டின் மூலம், ஸ்மார்ட்போன்களில் விரைவில் பேட்டரி சார்ஜ் விரயமாவது தடுக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.