Delete for Everyone option function Tamil News : ‘அனைவருக்கும் நீக்கு (Delete for everyone)’ என்பதை ஒரு விருப்பமாக சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியது. இந்த ஆப்ஷன், செய்தியிடல் சேவை அதன் பயனர்களுக்கு வழங்கும் மிகவும் பயனுள்ள அம்சங்களில் ஒன்றாகவும் மாறியது. ஒரு குழு அல்லது தனிப்பட்ட சாட்டிங்கில் தற்செயலாகத் தவறான செய்தியை அனுப்பியிருந்தால், இந்த அம்சம் அவர்களை சங்கடத்திலிருந்து காப்பாற்றுகிறது. இருப்பினும், வாட்ஸ்அப்பின் ‘அனைவருக்கும் நீக்கு’ அம்சம் செயல்படாத நேரங்களும் உள்ளன. இதனால் என்ன தவறு நடந்திருக்கலாம் என்று மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள். இந்த அம்சத்தைப் பற்றியும் அது எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் இனி பார்க்கலாம்.
வாட்ஸ்அப் ‘அனைவருக்கும் நீக்கு’ அம்சம் என்றால் என்ன?
பெயர் குறிப்பிடுவதுபோல், நீங்கள் தற்செயலாக அனுப்பிய செய்திகளை ஒரு தனிநபர் அல்லது குழு சாட்டிலிருந்து நீக்க அனுமதிக்கிறது. ஒரு குறிப்பிட்ட செய்தியை நீக்கும்போது, “இந்த செய்தி நீக்கப்பட்டது (This message was deleted)” என்ற ஒரு லேபிளையும் வாட்ஸ்அப் காண்பிக்கும். இதன் மூலம், மறுபுறம் உள்ள நபர் நீங்கள் ஒரு செய்தியை நீக்கியுள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்வார். இந்த அம்சத்தைப் பயன்படுத்தி, ஒருவர் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் செய்திகளையும் நீக்க முடியும்.
நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளைப் படிக்க வழி இருக்கிறதா?
ஆம், இரண்டு வழிகள் உள்ளன. நீக்கப்பட்ட செய்திகளைக் காண்பிக்கும் சில மூன்றாம் தரப்பு பயன்பாடுகளை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து காணலாம். இருப்பினும், இந்த பயன்பாடுகள் அங்கீகரிக்கப்படாததால் இதனை முயற்சி செய்து பார்ப்பது ஆபத்து. மேலும், உங்கள் வாட்ஸ்அப் கணக்கின் தனியுரிமை பாதிக்கப்படலாம். தவிர, நீக்கப்பட்ட வாட்ஸ்அப் செய்திகளை அறிவிப்பு பேனலில் (நோட்டிஃபிகேஷன்) நீங்கள் சரிபார்க்கவில்லை எனில், அங்குப் பார்த்துக்கொள்ளலாம்.
சாட்டில் உள்ள அனைவருக்கும் வாட்ஸ்அப் செய்திகளை எவ்வாறு நீக்குவது?
ஸ்டெப் 1: வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் நீக்க விரும்பும் செய்தியைக் கொண்ட சாட்டை பார்வையிடவும்.
ஸ்டெப் 2: நீக்கப்படவேண்டிய செய்தியை க்ளிக் செய்து நீண்ட நேரம் அழுத்தி, சாட்டின் மேல் பட்டியில் வைக்கப்பட்டுள்ள டஸ்ட்பின் ஐகானை அழுத்தவும். அதனை க்ளிக் செய்தபின், ‘எனக்கு மட்டும் நீக்கு’, ‘அனைவருக்கும் நீக்கு’ மற்றும் ‘ரத்துசெய்’ உள்ளிட்ட மூன்று விருப்பங்கள் காட்டும்.
ஸ்டெப் 3: அனைவருக்கும் நீக்கு என்பதை க்ளிக் செய்தால், செய்தி நீக்கப்படும்.
‘அனைவருக்கும் நீக்கு’ எப்போது வேலை செய்யாது?
நீங்களும் பெறுநரும் சமீபத்திய வாட்ஸ்அப் பதிப்பிலிருந்தால் மட்டுமே இந்த அம்சம் செயல்படும் என்று நிறுவனம் கூறுகிறது. எனவே, ‘அனைவருக்கும் நீக்கு’ தெரியவில்லை அல்லது வேலை செய்யவில்லை என்றால், நீங்கள் சமீபத்திய பதிப்பைப் பயன்படுத்துகிறீர்களா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
மேலும், ஒரு மணி நேரத்தில் நீங்கள் ஒரு செய்தியை நீக்கவில்லை என்றால், ‘அனைவருக்கும் நீக்கு’ விருப்பம் செயல்படாது. ‘எனக்கு மட்டும் நீக்கு’ விருப்பத்தை மட்டுமே காண்பிக்கும். “அனைவருக்கும் நீக்குவது வெற்றிகரமாக இல்லாவிட்டால் அது உங்களுக்கு அறிவிக்கப்படாது” என வாட்ஸ்அப் கூறுகிறது. எனவே, எந்தவொரு செய்தியையும் யாருக்கும் அனுப்புவதற்கு முன்பு கவனமாக இருப்பது அவசியம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”