உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்ட வாட்ஸ்அப் நிறுவனம், அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவர புதிய அப்டேட்களை வெளியீட்டு வருகிறது.
அந்த வகையில், அண்மையில் வாட்ஸ்அப் குளோபல் மீடியா பிளேயரை ஐஓஸ் பீட்டா வெர்ஷனில் காண முடிகிறது. இந்த அம்சம் மூலம், வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் சாட்டை விட்டு வெளியே வந்தாலும் கேட்க முடியும். வாய்ஸ் Background-இல் ஓடிக்கொண்டு இருக்கும். தற்போது, இந்த வசதி வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயனாளிகளுக்கும் கிடைக்கவுள்ளது. குறிப்பாக, பீட்டா பயனாளிகளிக்கு மட்டும் தான்.
WABetaInfo தகவலின்படி, வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா வெர்ஷன் 2.2204.5க்கு இந்த குளோபல் மீடியா பிளேயர் கிடைக்கவுள்ளது. எனவே, இனி ஐஓஎஸ் மற்றும் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பீட்டா பயனாளர்கள், குறிப்பிட்ட சாட்டில் இருந்து வெளியே வந்தால், வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும்.
ஆடியோ தொடர்ந்து கேட்கையில், மீடியா பிளேயர் சாட் லிஸ்டின் இறுதியில் வந்துவிடும். நீங்கள் தாராளமாக வாட்ஸ்அப் செயலிக்குள் வேறு எதாவது பார்த்துக்கொண்டிருக்கலாம்.ஐஓஎஸில், இந்த பிளேயர் மேல் பகுதியில் இருக்கும்.
இந்த குளோபல் மீடியா பிளேயரில் Play/ pause பட்டனும், Close பட்டனும் உள்ளது. எனவே, ஆடியோ மெசேஜை ஸ்டாப் செய்யவோ கிளோஸ் செய்யவோ, மீண்டும் சம்பந்தப்பட்ட சாட்டிற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.இந்த வசதி குறிப்பாக, நீண்ட வாய்ஸ் மெசேஜ்களை கேட்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.
தற்போது, டெஸ்க்டாப் பீட்டா பயனாளர்களுக்கு வந்துள்ளதால், அடுத்தக்கட்டமாக ஆண்ட்ராய்டு பீட்டா பயனாளர்களுக்கும் அப்டேட் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை கிடைக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil