/indian-express-tamil/media/media_files/gNaGCSCX4p3duilyN76I.jpg)
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதோடு பயனர்களின் தனியுரிமை கொள்கையிலும் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் பயனர்களின் Display pictures (டி.பி) or Profile pictures-ஐ ஸ்கிரீன்ஷாட் எடுப்பதற்கு தடை விதிக்க உள்ளது.
இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய அம்சம் பயனரின் அனுமதியின்றி தனிப்பட்ட புகைப்படங்களை எடுத்து பகிர்வதைத் தடுக்கும் வகையில் கொண்டு வரப்படுகிறது. இது தனியுரிமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு வருகிறது. இதை சோதனை செய்த போது 'ஆப்ஸ் தடை காரணமாக ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியவில்லை (Can’t take a screenshot due to app restrictions) என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக 2019-ம் ஆண்டு வாட்ஸ்அப் டி.பிக்கு இதே போன்ற தடையை கொண்டு வந்தது. அதாவது மற்றவர்களின் Profile pictures-ஐ டவுன்லோடு செய்ய முடியாதபடி தடை கொண்டு வந்தது. தற்போது ஸ்கிரீன் ஷாட் எடுப்பதற்கு தடை விதிக்கிறது. இது ஆள்மாறாட்டம், மோசடி போன்ற குற்றச் சம்வங்களை தடுக்கும் நோக்கில் கொண்டு வரப்படுகிறது என்றும் நிறுவனம் கூறியுள்ளது. பே.டி.எம், கூகுள் பே போன்ற பிற தளங்களும் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியை தடுத்துள்ளது.
“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.