WhatsApp Ending Support On These Mobiles Phones from 2020 : 2016ம் ஆண்டு ப்ளாக்பெர்ரி மற்றும் நோக்கியா ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்ஆப் சேவை நிறுத்தப்பட்டது.. பிறகு 2017ம் ஆண்டு சில ஆண்ட்ராய்ட், விண்டோஸ் மற்றும் ஐபோன்களில் சேவை நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு முறையும் வாட்ஸ்ஆப் புதிய அப்டேட்டை வழங்கும் போது அதற்கு ஏற்றவகையில் உருவாக்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே வாட்ஸ்ஆப் செயல்படும்.
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...
தற்போது சில போன்களி தங்களின் சேவையை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம். விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கிய நோக்கியா லுமியா போன்களில் டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு வாட்ஸ்ஆப் செயல்படாது என்ற அறிவிப்பு வெளியானது. மேலும் ஆண்ட்ராய்ட் 2.3.7 வெர்ஷனில் இயங்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்த சேவை ரத்தாகிறது. ஐஓஎஸ் 7 மற்றும் அதற்கு முந்தைய வெர்ஷனில் இயங்கும் ஐபோன்களிலும் பிப்ரவரி 1ம் தேதி முதல் சேவை நிறுத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன்களை நீங்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தால் இந்த ஆண்டின் இறுதிக்குள் உங்களின் ஆண்ட்ராய்ட், ஐபோன் அல்லது விண்டோஸ் போன்களை உடனே மாற்றிவிட்டு புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குங்கள் என்று வாட்ஸ்ஆப் வெளியிட்ட அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபலங்கள், ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்த ரஜினிகாந்த்!
உண்மையாகவே வாட்ஸ்ஆப் வேலை செய்யாதா?
அப்படி கூறிவிட இயலாது. இனிமேல் இந்த ப்ளாட்ஃபர்ம்களில் இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கான புதிய அப்டேட்களை வாட்ஸ்ஆப் அளிக்காது. எனவே உடனே வாட்ஸ்ஆப் செயலி இயங்காமல் போகும் நிலை வராது. ஆனால் சில நாட்களில் இது இயங்காமல் போகும் என்று வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் 2009ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் நோக்கியா மற்றும் ப்ளாக்பெர்ரி போன்களில் தான் 70% பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி வந்தனர்.இன்றோ கூகுளும், ஆப்பிளும், மைக்ரோ சாஃப்ட்டும் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. 99.5% வாடிக்கையாளர்கள் தற்போது இந்த இயங்கு தளங்களில் செயல்படும் ஸ்மார்ட்போன்களை தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அன்றைய சூழலில் 25%க்கும் குறைவான இந்த போன்களில் தான் வாட்ஸ்ஆப் இயங்கியது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.