வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்த எளிதாக இருப்பதால் பலரும் இதை பயன்படுத்துகின்றனர். இது மக்களிடையே பிரபலமாக பயன்படுத்தும் செயலியாகவும் இருந்து வருகிறது.
செயலி மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், போலி செய்திகளும், தகவல்களும் தளத்தில் பரப்பபடுகிறது. இது சில நேரங்களில் பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக அண்மையில் ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் டீப் ஃபேக் ஆடியோ, வீடியோ போன்றவைகள் சமூகத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதே போல் மோசடி சம்பவங்களும் அரங்கேறுகிறது.
இந்நிலையில், வாட்ஸ்அப் தனது தளத்தில் டீப் ஃபேக் மற்றும் ஏ.ஐ மூலம் உருவாக்கப்படும் தவறான தகவல்கள் போன்றவற்றை தடுக்க உண்மைச் சரிபார்ப்பு சாட்போட்டை அறிமுகம் செய்கிறது.
Meta மற்றும் Misinformation Combat Alliance (MCA) இணைந்து வாட்ஸ்அப்-ல் பிரத்யேக உண்மைச் சரிபார்ப்பு ஹெல்ப்லைனை ( fact-checking helpline) விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வசதி அடுத்த மாதம் முதல் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வசதி fact-checkers and research organisations உதவியுடன் இயங்கும். இந்த சாட்போட் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: https://indianexpress.com/article/technology/tech-news-technology/whatsapp-to-soon-get-fact-checking-helpline-to-curb-misinformation-9169216/
சந்தேகத்திற்கு உரிய தகவல்கள் இருந்தால் பயனர்களை ஹெல்ப்லைன் மூலம் அதை குழுவுக்கு அனுப்பலாம். உண்மைச் சரிபார்ப்பு குழு தகவலின் அடிப்படையில் அதை தொழில் பங்குதாரர்கள், டிஜிட்டல் ஆய்வகங்களுக்கு அனுப்பி தகவலின் உண்மைத் தன்மையை சோதிப்பர்.
Meta மற்றும் Misinformation Combat Alliance திட்டமானது "நான்கு தூண் அணுகுமுறையைக் கொண்டுள்ளது - கண்டறிதல், தடுப்பு, புகாரளித்தல் மற்றும் டீப்ஃபேக்குகளின் பரவலைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“