Advertisment

வாட்ஸ்ஆப் மூலம் வரும் போலி செய்திகளை கண்டறிவது எப்படி? புதிய டெக்னாலஜி அறிமுகம்!

தற்போது 4 பிராந்திய மொழிகளில் மட்டுமே இந்த சேவைகளை மக்கள் பெற்றுக் கொள்ள இயலும். 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
WhatsApp breach, Israeli spyware pegasus, Pegasus spy case india,

WhatsApp breach, Israeli spyware pegasus, Pegasus spy case india,

Whatsapp fake news general election 2019 : ஏப்ரல் 11ம் தேதி முதற்கட்டமாக இந்தியாவின் பொதுத்தேர்தல் நடை பெற உள்ள்ளது. அனைத்து வகையிலும் மிகவும் சிறப்பான, பாதுகாப்பான தேர்தலாக இதை நடத்த இந்தியா தேர்தல் ஆணையம் போதுமான முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

Advertisment

ஆனால் தடுக்கவே இயலாத ஒரு முக்கியமான ஒன்று வாட்ஸ்ஆப், முகநூல் மற்றும் இதர சோசியல் மீடியா தளங்கள் மூலமாக பரவும் போலியான செய்திகள். இதனை தடுப்பதற்காகவும் வாட்ஸ்ஆப் தற்போது செக்பாய்ண்ட் டிப்லைனை (CheckPoint Tipline) கொண்டு வந்துள்ளது.

எப்படி செயல்படுகிறது ப்ரோட்டோ செக்பாய்ண்ட் டிப்லைன்?

+91-9643-000-888 என்ற எண்ணில் அந்த செக்பாய்ண்ட் டிப்லைன் செயல்படும். இந்த செயல்பாட்டை இந்தியாவைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ப்ரோட்டோ (PROTO) மேற்பார்வை செய்கிறது.

உங்களின் வாட்ஸ்ஆப்பிற்கு வரும் செய்திகளின் உண்மை தன்மையை சோதிக்க விரும்பினால் அந்த செய்தியை நீங்கள் +91-9643-000-888 எண்ணில் இயங்கி வரும் டிப்லைனிற்கு அனுப்பலாம்.

அங்கு பணியில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகள் உங்களுக்கு வந்திருக்கும் செய்தியின் நிலைத்தகவல், உண்மைத் தன்மை, போலியானதா என்பதை பட்டியலிட்டு, அதற்கு ஆதரமான அல்லது மாற்று உண்மை செய்திகளை உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்.

குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோ லிங்குகள் என எதைப் பற்றிய தகவல்களையும் நீங்கள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு மலையாளம், வங்கம் ஆகிய மொழிகளில் தெரிந்து கொள்ளலாம். தற்போது 4 பிராந்திய மொழிகளில் மட்டுமே இந்த சேவைகளை மக்கள் பெற்றுக் கொள்ள இயலும்.

இந்த திட்டத்தின் வாயிலாக வாட்ஸ் ஆப்பில் பரவி வரும் போலிச் செய்திகளின் தன்மை, எங்கே அதிக அளவில் இப்படியான செய்திகள் பரவுகின்றன. மொழி, இடம், பிராந்தியங்கள் வாரியாக இந்த டேட்டாவை பெற்றுக் கொள்ள இது உதவிகரமாக இருக்கும் என்று ப்ரோட்டோ நிறுவனத்தின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த ஆய்வுகளின் முடிவுகளை சர்வதேச பத்திரிக்கையாளர்கள் அமைப்பிற்கு மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்கு அளிக்க இருப்பதாக ப்ரோட்டோ கூறியுள்ளது.

ஏப்ரல் 11 துவங்கி மே 19 வரையில் 7 கட்டங்களாக நடைபெறும் தேர்தல் முடிவுகள் மே 23ம் தேதி அறிவிக்கப்படும். இந்தியாவில் மட்டும் 250 மில்லியன் மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்தி வருகின்றனர். போலி செய்திகளை தடுக்கும் பொருட்டு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது வாட்ஸ் ஆப்.

மேலும் படிக்க : வாட்ஸ்ஆப்பிலும் வருகிறது பிங்கர் பிரிண்ட் அன்லாக் வசதி…

Whatsapp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment