மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது 'ஃபேவரைட் டேப்' (Favourite tab) என்ற அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் மூலம் உங்களுக்குப் பிடித்தவர்களுக்கு உடனடியாக டெக்ஸ்ட், கால் செய்யலாம். இந்த அம்சம் ஆப்பிள், ஆண்ட்ராய்டு என இரண்டு போனிலும் அறிமுகம் ஆகிறது.
எனினும் தற்போது இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நபர்களின் contacts-ஐ பின் செய்து வைத்து பயன்படுத்தலாம். WABetaInfo-ன் தகவல்படி, வாட்ஸ்அப்-ல் ஃபேவரைட் டேப், all chats, unread chats எனத் தனித்தனியாக டேப்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பயனர்கள் ஹோம் பேஜில் 3 contacts-களை பின் செய்து கொள்ளலாம்.
இந்த அனைத்து டேப்களும் ஒரே பேஜில் இடம்பெறும் வகையில் அம்சம் அறிமுகம் ஆகிறது. இது பயனர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும் என்றும் அடிக்கடி மெசேஜ், கால் செய்யும் நபர்களின் contacts-களை எளிதாக பயன்படுத்த முடியும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. இந்த அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து பயனர்களுக்கும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“