Whatsapp Feature update Tamil News : வாட்ஸ்அப் அடுத்த ஆண்டு மெசேஜிங் பயன்பாட்டின் டெஸ்க்டாப் பதிப்பிற்கு வாய்ஸ் மற்றும் வீடியோ அழைப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தும் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பெரிய திரையில் அழைப்புகளை எளிதாக்குவதற்கான இந்த நடவடிக்கை வாட்ஸ்அப்பை, வீடியோ-கான்பரன்சிங் பிக்விக்ஸ் ஜூம் மற்றும் கூகுள் மீட்டிற்கு இணையாக வைக்கும். ஆனால், இந்த இருவருடனும் போட்டியிட ஏதேனும் ஆதாயங்கள் உள்ளதா என்பது தெளிவாக இல்லை.
உலகளவில் 2 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட, வாட்ஸ்அப் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் இன்க் பயன்பாட்டிற்கு அடுத்தபடியாக உள்ளது. இருப்பினும் இது ஜூம் அல்லது கூகுள் மீட் போலல்லாமல் தனிப்பட்ட அழைப்புகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், விடுமுறை காலத்திற்கான சோதனை அடிப்படையில் சில டெஸ்க்டாப் பயனர்களுக்கு இந்த அம்சத்தை ஏற்கெனவே வெளியிட்டுள்ளதாக வாட்ஸ்அப் கூறியது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை உலகெங்கிலும் உள்ள பலரை வீட்டிலேயே தங்கும்படி கட்டாயப்படுத்தி, அதற்கு பதிலாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணையத்தில் இணைக்க வழிவகுத்தது.
கடந்த வெள்ளிக்கிழமை ஜூம் வீடியோ கம்யூனிகேஷன்ஸ் இன்க், விடுமுறை நாட்களில் உலகளவில் அனைத்து சந்திப்புகளிலும் அதன் இலவச கணக்குகளுக்கான 40 நிமிட கால வரம்பை நீக்குவதாகக் கூறியது. இதேபோன்று, மார்ச் மாதம் வரை இலவச பயனர்கள் உரையாடல்களை 60 நிமிடங்களுக்கு மட்டுப்படுத்த வேண்டியதில்லை என்று கூகுள் மீட் கூறியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"