2018-ம் ஆண்டை குதூகலமாக்கிய வாட்ஸ்ஆப்பின் புதிய அப்டேட்கள்

Best WhatsApp Features of 2018 : ஒரே நேரத்தில் நான்கு பேர் வீடியோ மற்றும் ஆடியோ கால்களில் பேசிக் கொள்ளலாம்

Whatsapp Features 2018 : செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எந்த அளவு இந்த வருடத்தில் வளர்ச்சி பெற்றதோ, அதே போல் ஒரு வளர்ச்சியையும் மாற்றங்களையும் வாட்ஸ்ஆப்பும் கண்டது.

முகநூல் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த செயலி, இந்த வருடத்தில் ஆண்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் மற்றும் வாட்ஸ்ஆப் வெப் என அனைத்திலும் புதிய புதிய அப்டேட்டுகளையும் கொண்டு வர தயங்கவில்லை.

1. Whatsapp Features 2018 வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள்

தீபாவளிக்கு முன்பு வெளியான இந்த அப்டேட் உடனடியாக அனைத்து வாடிக்கையாளர்களையும் பெரிதும் கவர்ந்தது. தேர்ட்-பார்டி டெவலப்ட் ஸ்டிக்கர்கள் மட்டுமல்லாமல் பயனாளிகள் தங்களுக்குவ் விருப்பமான ஸ்டிக்கர்களை தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் வசதிகளையும் உருவாக்கியிருந்தது.

மேலும் படிக்க : வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள் எப்படி செயல்படுகிறது ?

2.  Whatsapp Features 2018 : ஃபார்வர்ட் லிமிட்டேசன்ஸ்

இந்தியாவில் போலியான தகவல்கள் மற்றும் செய்திகளால் அதிக அளவு வன்முறைகளும் கலவரங்களும் நிலவின. இதனை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது வாட்ஸ்ஆப் நிறுவனம். புதிய அப்டேட் படி ஒருவர் ஒரு மெசேஜ்ஜை 5 நபர்களுக்கு மட்டுமே ஃபார்வர்ட் செய்ய முடியும்.

3. ஃபார்வர்ட் லேபிள்கள்

ஃபார்வர்ட் லிமிட்டேசன்கள் கொண்டு வந்த கையோடு, ஃபார்வர்ட் லேபிள்களும் அறிமுகப்படுத்தப்பட்டது. பகிரப்படும் செய்திகளின் நம்பகத்தன்மை, உண்மையான செய்திகள் தானா என்பதை ஆராய்வது பெரிதும் உதவியாக இந்த லேபிள்கள் அமைந்தன.

Whatsapp Features 2018, Best WhatsApp Features 2018

Whatsapp Features 2018 : Forward label and limitations

4. Whatsapp Features 2018 : பிக்சர் – இன் – பிக்சர் மோட்

வாட்ஸ்ஆப்பில் இருந்த வண்ணமே தேர்ட் – பார்ட்டி வீடியோ வெப்சைட்டுகளுக்கு செல்லாமல், ஒருவரால் வீடியோக்களை அதே விண்டோவில் பார்த்துக் கொள்ளலாம். யூடியூப், பேஸ்புக், டம்ப்ளர் போன்ற இணைய தளங்களுக்கு செல்லும் நேரத்தை மிச்சப்படியத்து இந்த ஆப்

மேலும் படிக்க : பிக்சர் – இன் – பிக்சர் மோட் அப்டேட்டினை பெறுவது எப்படி ?

5. வீடியோ மற்றும் ஆடியோ க்ரூப் கால்

இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே வெளியானது இந்த அப்டேட். ஒரே நேரத்தில் நான்கு பேர் வீடியோ மற்றும் ஆடியோ கால்களில் பேசிக் கொள்ளலாம். முதலில் யார் கால் செய்கின்றாரோ அவர் தான், ஆட் பார்டிசிபெண்ட் கொடுத்து புதிய ஆட்களை சாட்டிங்கில் இணைக்க வேண்டும்.

Whatsapp group call, Best WhatsApp Features 2018

மேலும் படிக்க : இந்த வருடத்தில் வெளியான சூப்பர் ஸ்மார்ட்போன்கள் எது ?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

×Close
×Close