Advertisment

WhatsApp features 2020 : அடுத்த வருடத்தில் வாட்ஸ்ஆப்பில் இருந்து என்னென்ன எதிர் பார்க்கலாம்?

வாட்ஸ்ஆப் வழியாக ப்ரௌசிங் செய்ய இயலும் வகையில் இன் ஆப் ப்ரௌசர் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
whatsapp back online, whatsapp working again, வாட்ஸ் அப், புகைப்படம் வீடியோ அனுப்புவதில் சிக்கல், வாட்ஸ் அப்பில் சிக்கல், whatsapp down, whatsapp not working, whatsapp out, whatsapp photo send fail, whatsapp problem

WhatsApp features 2020 Dark mode, Face unlock, Delete Messages, Multiple device support : 2019ம் ஆண்டு வாட்ஸ்ஆப்பில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. அந்த செயலியை மேலும் சிறப்பாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. வாட்ஸ்ஆப் ஸ்டோரியை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்வது, பிப் மோட், லிமிட் செய்யப்பட்ட ஃபார்வர்ட் வசதிகள் போன்றவை அதில் மிக முக்கியமானவை. இந்த வருடம் வர இருக்கும் முக்கிய அப்டேட்கள் என்ன என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.

Advertisment

Dark mode

வெகுநாட்களாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு முக்கியமான அப்டேட் இது தான். ஏற்கனவே பீட்டா மோடில் டெஸ்டில் ஊள்ளது. செட்டிங் மெனுவில் டார்க் மோட் செட்டிங் வைக்கப்பட்டு தேவைக்கு ஏற்ற வகையில் பயன்படுத்துமாறு வடிவமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Face unlock

ஃபேஸ்அன்லாக் மூலம் செல்ஃபோன்களை அன்லாக் செய்வது போன்றே, வாட்ஸ்ஆப் செயலியையும் அன்லாக் செய்ய உருவாக்கப்பட்ட சிறப்பு ஏற்பாடு இதுவாகும். உங்களுடைய சாட்களை மற்றவர்கள் பார்ப்பதை தடுக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேஸ் ஐடி சப்போர்ட் மூலமாக வாட்ஸ்ஆப் செயல்பாடு அடுத்த ஆண்டில் நிச்சயம் அப்டேட் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Multiple device support

தற்போது வரை ஒரே ஒரு அக்கௌண்ட்டை ஒரே ஒரு டிவைஸில் மட்டுமே பயன்படுத்த இயலும் நிலை உள்ளது. ஆனால் வரும் காலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட டிவைஸ்களில் பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Last seen for select friends

தற்போது நம்முடைய கான்டாக்ட்டில் இருப்பவர்கள் மட்டுமே பார்க்கும் வகையில் லாஸ்ட் சீன் உள்ளது. இல்லையென்றால் அனைவரும் பார்க்கும் வகையிலும், அல்லது யாரும் பார்க்க முடியாத வகையிலும் மட்டுமே செட்டிங்கில் மாற்ற இயலும். தற்போது கான்டாக்டில் இருப்பவர்களில் யாருக்கு மட்டும் லாஸ்ட் சீன் தெரிய வேண்டுமோ அவர்கள் மட்டும் பார்க்கும் வகையில் மாற்றிக் கொள்ள செட்டிங்கில் மாற்ற டெஸ்டிங் நடக்கிறது.

In-app browser

வாட்ஸ்ஆப் வழியாக ப்ரௌசிங் செய்ய இயலும் வகையில் இன் ஆப் ப்ரௌசர் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது வாட்ஸ்ஆப் நிறுவனம். இதுவும் 2020ம் ஆண்டில் செயல்படுத்தபடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : Best Budget Smartphones 2019 : இந்த ஆண்டு வெளியான சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எது?

Whatsapp Whatsapp Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment