WhatsApp features automatically delete messages : கடந்த ஆண்டு வாட்ஸ்ஆப் பல்வேறு சிறப்பு அம்சங்களின் தங்களின் ஆப்களில் அப்டேட் செய்தது. இந்த வருடத்திலும் பயனாளர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளது. ஏற்கனவே டார்க் மோட் செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. புதிய அப்டேட்டில் புதிதாக ஸ்டேட்டஸில் விளம்பரங்களை அறிவிக்கும் அப்டேட்டும் வெளியாக உள்ளது.
Advertisment
தர்பாருக்கு இசை அமைத்த அனிருத் மீது இப்படி ஒரு நடவடிக்கையா?
அது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது என்று தெரியும். இருப்பினும் அதை தான் செய்ய உள்ளது வாட்ஸ்ஆப். டெஸ்டிங் அனைத்தும் முடிந்த பிறகு விரைவில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிய வந்துள்ளது. அதே போன்று டெலிட் மெசேஜ் என்ற ஆப்சனும் விரைவாக வர உள்ளது.
இது க்ரூப் மெசேஜ்களை மட்டுமே அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்குமே தவிர ப்ரைவேட் சாட்களில் எந்த விதமான மாற்றமும் இன்றி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப்பில் வரும் மெசேஜ்களை டெலிட் செய்யும் கூடுதல் பொறுப்பும் குரூப் அட்மின்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அட்மின்கள் குறிப்பிட்ட கால கட்டத்தை செட் செய்தால் அதற்கு ஏற்ற வகையில் மெசேஜ்கள் டெலிட் ஆக தொடங்கிவிடும். ஸ்டோரேஜ் ஸ்பேசை நம்மால் நிச்சயம் சரியாக மேனேஜ் செய்ய உதவும். இந்த டெலிட் மெசேஜ் ஆப்சன் டாகில் ஆன் மற்றும் ஆஃப் ஆப்சன்களுடன் வரும். இதில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் பயனர்கள் தங்களின் மெசேஜ்களை டெலிட் செய்து கொள்ளலாம்.