Whats App Dark Mode: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸ் ஆப் டார்க் மோட் அம்சத்தை வாட்ஸ் ஆப் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. பேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படும் வாட்ஸ் ஆப் செயலி டார்க் மோட் அம்சத்தை உலகெங்கிலும் உள்ள அனைத்து பயனர்கள் மத்தியில் வெளியிடுவதற்கு முன்பு குறைந்தது ஒரு வருடம் சோதித்துப் பார்த்தது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு வாட்ஸ் ஆப் டார்க் மோட் கிடைக்கிறது. மேலும் வலை பயனர்களையும் அது விரைவில் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
தற்போது வாட்ஸ் ஆப் மேலும் சில அம்சங்களை சோதித்து வருகிறது அவை வரும் மாதங்களில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கப் போகிறது. Multiple device support மற்றும் disappearing messages போன்றவை வரவிருக்கும் பல வாட்ஸ் ஆப் அம்சங்களில் முக்கியமானவை.
Multiple device support
இப்போது வாட்ஸ் ஆப் பயனர்கள் ஒரே நேரத்தில் தங்களது கணக்கை ஒரு கைபேசியில் மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஆனால் வரவிருக்கும் Multiple device support அம்சம் மூலமாக பயனர்கள் ஒரு வாட்ஸ் ஆப் கணக்கை ஒன்றுக்கு மேற்பட்ட சாதனங்களில் ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட கைபேசிகளை பயன்படுத்தும் நபர்களுக்கு இது மிகவும் பயனளிக்கும் அம்சமாகும். சில காலமாக வாட்ஸ் ஆப் இந்த அம்சத்தை சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் எப்போது வெளியிடப்படும் என்பதை வாட்ஸ் ஆப் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கான Face Unlock வசதி
ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ் ஆப் செயலி ஏற்கனவே fingerprint lock ஆதரவுடன் வருகிறது. இதைபோல் வாட்ஸ் ஆப் ஆண்ட்ராய்ட் பயனர்களுக்கான மற்றுமொரு பாதுகாப்பு அம்சமான Face Unlock வசதியை சோதித்து வருகிறது. Face ID ஆதரவுடன் இந்த அம்சம் அனைத்து ஆண்ட்ராய்ட் கைபேசிகளுக்கும் வரும் மாதங்களில் வெளிவரப் போகிறது.
Last seen for select friends option
கடைசியாக பார்த்ததுக்கு (Last Seen), வாட்ஸ் ஆப் ஏற்கனவே மூன்று தேர்வுகளை வழங்கி வருகிறது : Last Seen - “contacts” “everyone” அல்லது “only me”. இப்போது “Last seen for select friends” என்ற அம்சத்தையும் வழங்க வாட்ஸ் ஆப் வேலை செய்து வருகிறது. பயனர்கள் தாங்கள் வாட்ஸ் ஆப்பை கடைசியாக பார்த்த நேரத்தை அவர்கள் தொடர்புகள் பட்டியலில் (contact list) உள்ள குறிப்பிட்ட தொடர்பு எண்கள் மட்டும் அறிந்துக் கொள்ள முடியும். மற்றவர்கள் இதை பார்க்க முடியாது. இந்த அம்சத்தையும் வாட்ஸ் ஆப் எப்போது வெளியிடப் போகிறது என்பதை தெரிவிக்கவில்லை.
Disappearing messages
மறைந்து போகும் குறுஞ்செய்திகள் (Disappearing messages) அம்சம் குறித்தும் வாட்ஸ் ஆப் சிறிது காலமாக வேலை செய்கிறது. 24 மணி நேரத்துக்கு பிறகு மறைந்து போகும் Status அம்சத்தை போலவே இந்த அம்சமும் வேலை செய்யும். குறிப்பிட்ட குறுஞ்செய்தி இடுகை (Message post) மறைந்து போவதற்கு வாட்ஸ் ஆப் பயனர்கள் ஒரு குறிப்பிட்ட கால அளவை நிர்ணயம் செய்துக் கொள்ளலாம். அந்த நேரத்துக்கு பிறகு அந்த இடுகை தானாக மறைந்து போய்விடும்.
WhatsApp secure chat backups
வாட்ஸ் ஆப் அரட்டைகளை (chat) பேக்கப் (backup) எடுத்து பத்திரப்படுத்தும் ஒரு பாதுகாப்பு அம்சம் குறித்தும் வாட்ஸ் ஆப் வேலை செய்து வருகிறது. தற்போது வாட்ஸ் ஆப் தனது பயனர்களின் அரட்டை வரலாறுகளை iCloud மற்றும் Google Drive ல் போக்கப் செய்யும் வசதியை வழங்குகிறது. ஆனால் அந்த பேக்கப் பைல்கள் வாட்ஸ் ஆப் பின் end-to-end encryption முறையில் பாதுகாக்கப்படவில்லை. இந்த புதிய பாதுகாப்பு அம்சம் இந்த சிக்கலை தீர்த்துவிடும். இந்த அம்சமும் எப்போது வெளிவரப் போகிறது என்பது தெரிவிக்கபடவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.