Whatsapp emoji reactions: வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்து வந்த எமோஜி ரியாக்ஷன் அம்சம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
எமோஜி ரியாக்ஷன் வசதி ஏற்கனவே பிரபல தகவல் தொடர்பு தளங்களான இன்ஸ்டாகிராம், டெலிகாரம், iMessage போன்றவற்றில் உள்ளது. தற்போது, வாட்ஸ்அப் பயனர்களும் உபயோகிக்கலாம்.
பயனர்கள் 6 எமோஜிகளில் எதெனும் ஒன்றை அனுப்பும் வகையில் வாட்ஸ்அப் வடிவமைத்துள்ளது. தற்போதைக்கு, ரியாக்ஷனை மாற்றும் வசதி வழங்கப்படவில்லை. ஆனால், கூடுதல் விருப்பங்களை பின்னர் வழங்கப்படும் என மார்க் அறிவித்திருந்தார். 6 எமோஜிகளில் லவ், ஆச்சரியம், சிரிப்பு, சோகம், நன்றி போன்ற ஸ்மைலிகள் இடம்பெற்றுள்ளன.
எமோஜி ரியாக்ஷன் மற்ற செயலிகளில் பயன்படுத்துவது போலவே, மெசேஜை அழுத்திப் பிடித்து, திரையின் மேல் தோன்றும் எமோஜிக்களில் ஒன்றை தேர்வு செய்தால் அனுப்பிவிடலாம். மெசேஜை லாங் பிரஸ் செய்வது போல், போட்டோ மற்றும் வீடியோவுக்கு ரியாக்ஷனில் பதில் அனுப்பலாம்.
முன்னதாக தேர்வு செய்யப்பட்ட பீட்டா பயனர்களிடையே இந்த அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வெளியீடு தொடங்கியிருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil