whatsapp fingerprint authentication feature : வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த வருடம் புதிய அப்டேட்டுகளை அதிக அளவில் வெளியிட இருப்பதாக ஏற்கனவே இந்த வருடத்தின் தொடக்கத்தில் கூறியிருந்தது.
பேஸ் ஐடி மற்றும் டச் ஐடி என இரண்டும் இருந்தால் மட்டுமே இனி வாட்ஸ்ஆப் சாட்களை பார்க்கவோ படிக்கவோ இயலும் வகையில் புதிய அப்டேட்டை வெளியிட ஏற்கனவே கூறியிருந்தது.
ஆப்பிள் ஐ.ஓ.எஸில் இயங்கும் வாட்ஸ்ஆப்பில் இந்த அப்டேட்டுகள் ஏற்கனவே வந்துவிட்ட நிலையில் ஆண்ட்ராய்ட்டுகான அப்டேட் பீட்டா வெர்ஷன் 2.19.3ல் உள்ளது.
இந்த அப்டேட்டை பெறுவது எப்படி ?
தற்போது முழு வீச்சில் பிங்கர்ஃபிரிண்ட் டச் ஐடி மூலமாக வாட்ஸ்ஆப் செக்யூரிட்டி அமைக்கும் பணியில் தீவிரமாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது அந்நிறுவனம்.
பீட்டா வெர்ஷனில் இந்த அப்டேட்டினாஇ பெற, செட்டிங்ஸ், அக்கௌண்டிங், ப்ரைவசி, யூஸ் ஃபிங்கர் பிரிண்ட் டூ அன்லாக் என்ற ஆப்சனை க்ளிக் செய்யவும்.
அதன் பின்பு கைரேகையை பதிவு செய்யக் கோரி கேட்கும். அது முடிந்த பின்பு எவ்வளவு நேர அடிப்படையில் வாட்ஸ்ஆப்பை லாக் செய்ய வேண்டும் என்று கேட்கும். அதனை உங்கள் விருப்பப்படி கொடுத்துக் கொள்ளலாம்.
அனைத்து வாடிக்கையாளர்களாலும் இந்த அப்டேட்டை தற்போது பெற இயலாது. ஆனால் சிறிது காலத்திற்குள் அனைவருக்கும் இந்த அப்டேட் கிடைத்துவிடும்.