Whatsapp fingerprint feature launch : வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது அந்நிறுவனம். இனிமேல் உங்களின் கைரேகை இல்லாமல் உங்களின் வாட்ஸ்ஆப் குறுஞ்செய்திகளை யாரும் பார்க்கவோ படிக்கவோ இயலாது.
ஆண்ட்ராய்ட் போன்களில் தான் இந்த புதிய சிறப்பம்சங்கள் வெளியாக உள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் வாட்ஸ்ஆப் செயலியை பாதுகாக்க முற்பட்டால், அதற்காக புதிய ஆப் ஒன்றை தான் டவுன்லோடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக புதிய அப்டேட்டாக இதை வெளியிட்டுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
Whatsapp fingerprint feature launch
ஏற்கனவே ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் செயல்பட்டு வரும் வாட்ஸ்ஆப் செயலியில் ஃபேஸ் ஐ.டி. மற்றும் பிங்கர் பிரிண்ட் போன்ற பயோ மெட்ரிக் ஐ.டிகளை வைத்து, செயலியை பயன்படுத்தும் முறையை வெற்றிகரமாக பரிசோதித்துவிட்ட நிலையில், ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்சனில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ப்ரைவசி செட்டிங்க்ஸில் சென்று இந்த புதிய லாக்கிங் சிஸ்டத்தை அக்செஸ் செய்து கொள்ள இயலும். பயோமெட்ரிக் போலவே பேட்டர்ன் லாக்கிங்கும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : வாட்ஸ்ஆப் கோல்ட் … பாக்க மட்டும் தான் காஸ்ட்லி… க்ளிக் பண்ணுனா போன் போயிடும்…