வாட்ஸ் அப் யூசர்கள் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த புதிய அம்சத்தை அந்நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.
இன்றைய தொழில்நுட்ப உலகில் வாட்ஸ் அப் செயலி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக வாட்ஸ் அப் செயலி, அடுத்த ஃபேஸ்புக்காகவும் பார்க்கப்படுகிறது. காரணம், சமூக வலைத்தளங்களில் முன்னணி செயலியாக இருக்கும் ஃபேஸ்புக் கடந்த வாரம் சந்தித்த மிகப்ப் பெரிய சர்ச்சை பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகளை பெற்றுள்ளது.
அதிலும், யூசர்களின் தகவல்கள் வெளியானது என்ற செய்தி, பலரையும் திகைக்க வைத்தது. இதன் எதிரொலியாக சந்தையில் ஃபேஸ்புக்கின் பங்கு மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப்பில் மிக முக்கியமான செட்டிங் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
அதுதான் டிஸ்மிஸ் அட்மின் என்னும் புதிய அம்சம். இது வாட்ஸ்அப் க்ரூப்களுக்கானது ஆகும். இந்த அம்சம் க்ரூப் அட்மின்கள் குறிப்பிட்ட க்ரூப் மற்ற அட்மின் பொறுப்பாளர்களை க்ரூப்பில் இருந்து நீக்காமல் அட்மின் பொறுப்பை மட்டும் நீக்கும் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் க்ரூப் இன்ஃபோ பகுதியில் இருந்து இயக்க முடியும்.
இந்த அம்சம் டிஸ்மிஸ் அட்மின் என்ற பெயரில் ஐஓஎஸ் மற்றும் வெப் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனை 2.18.41 வெர்ஷனில் இருந்து 2.18.116 வெர்ஷனில் யூசர்களுக்கு வழங்கப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து, மற்றொரு அம்சமாக ஹை ப்ரியாரிட்டி நோட்டிஃபிகேஷன் மற்றும் டிஸ்மிஸ் அட்மின் போன்ற வசதிகளும் யூசர்களுக்கு கூடிய விரைவில் வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.