வாட்ஸ் அப்பில் வாடிக்கையாளர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த மொபைல் நம்பர் சேன்ஜிங் வசதி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தொழில்நுட்ப உலகில் வாட்ஸ் அப் செயலி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. குறிப்பாக வாட்ஸ் அப் செயலி, அடுத்த ஃபேஸ்புக்காகவும் பார்க்கப்படுகிறது. காரணம், சமூக வலைத்தளங்களில் முன்னணி செயலியாக இருக்கும் ஃபேஸ்புக் கடந்த வாரம் சந்தித்த மிகப்ப் பெரிய சர்ச்சை பல்வேறு தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகளை பெற்றுள்ளது.
அதிலும், யூசர்களின் தகவல்கள் வெளியானது என்ற செய்தி, பலரையும் திகைக்க வைத்தது.
இதன் எதிரொலியாக சந்தையில் ஃபேஸ்புக்கின் பங்கு மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. இந்நிலையில், கூடிய விரைவில் ஃபேஸ்புக் செயலி மாற்றப்பட்டு வாட்ஸ் அப் செயலி, ஃபேஸ்புக் பெற்றிருக்கும் சிறப்மசங்களைக் கொண்டு வெளிவரம் என்ற செய்தியும் உலா வரத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது வாட்ஸ் அப்பில் மிக முக்கியமான செட்டிங் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. நண்பர்கள் மற்றும் குரூப்களுக்கு யூசரின் வாட்ஸ் எண் மாற்றப்பட்டால் அதை அறிவிக்கும் செயல்முறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் ஆனது ஆண்ட்ராய்டின் சமீபத்திய வாட்ஸ்ஆப் பீட்டா பதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதில் மொத்தம் மூன்று ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1, ஒரு யூசர் மொபைல் நம்பரை மாற்றும் போது, வழக்கம்போல எல்லா தொடர்புகளுக்கும் அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும்.
2. நீங்கள் தேர்வு செய்யும் அல்லது உங்களில் பழைய சேட்டில் உள்ள நண்பர்களுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்படும்.
3. நீங்கள் ஆம் என்றால் மட்டுமே நம்பர் மாற்றப்பட்ட அறிவிப்பு வெளியாகும் இல்லையெனில் அது தானாகவே மறைந்து விடும்.
இந்த மூன்று ஆப்ஷன்கள் உடைய அப்டேட் தற்போது வாட்ஸ் அப்பின் பீட்டா வெர்ஷனில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. கூடிய விரைவில், இந்த வசதி, ஐ ஃபோன் மற்றும் விண்டோஸ் வகை போன்களில் விரைவில் அறிமுகமாகிறது.