மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. இன்ஸ்டண்ட் மெசேஜிங் ஆப்பான வாட்ஸ்அப் சமீப காலமாக அதிக அப்டேட்களை கொடுத்து வருகிறது. பயனர்களுக்கு பிடித்தமான பல புதிய வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.
அந்தவகையில் தற்போது மல்டி- அக்கவுண்ட் ஃபீட்ஸர் என்ற அம்சம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற ஆப்களுக்கு இடையில் எளிதாக மாறிக் கொள்ளும்படி இந்த அம்சம் அறிமுகம் செய்ய உள்ளது.
WABetaInfo தகவல் படி, இந்த அப்டேட் தற்போது வாட்ஸ்அப் பிசினஸில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக கூறியுள்ளது. வெவ்வேறு எண்களுடன் இணைக்கப்பட்ட வெவ்வேறு வாட்ஸ்அப் கணக்குகளுக்கு இடையில் எளிதாக மாற அனுமதிக்கிறது.
விரைவில் அறிமுகம்
பல வாட்ஸ்அப் அக்கவுண்ட் கொண்ட பிசினஸ் பயனர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில்
இது ஆப் க்ளோனர்கள் போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளைப் பயன்படுத்தால் வாட்ஸ்அப்பில் இருந்தே வேறு ஆப்களுக்கு இடையில் மாற அனுமதிக்கும்.
மல்டி அக்கவுண்ட் அம்சமானது வாட்ஸ்அப் பிசினஸிற்கு மட்டுமல்லாமல் அனைத்து வாட்ஸ்அப் பயனர்களின் பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் மெசஞ்சருக்கும் கொண்டு வரப்படும் என கூறப்பட்டுள்ளது.
தற்போது வாட்ஸ்அப் பிசினஸ் v2.23.13.5 என்ற பீட்டா வெர்ஷனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சம் தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“