whatsapp from facebook tagline : கடந்த ஆண்டே இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மற்றும் வாட்ஸ்ஆப் மூன்றையும் ஒன்றிணைக்க இருப்பதாக மார்க் ஸூக்கர்பெர்க் அறிவித்தார். அதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஃபேஸ்புக் ஸ்டோரியை வாட்ஸாப்பில் இணைப்பதற்கான சோதனை முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளது. தற்போது பேஸ்புக்கில் இருந்து வாட்ஸ்ஆப் என்ற புதிய டேக்லைன் ஒன்றை அப்டேட் செய்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.
Whatsapp from Facebook tagline - எதற்காக இப்படி ஒரு டேக்லைன்?
ஆண்ட்ராய்ட் பீட்டா வெர்ஷனில், செட்டிங்க்ஸ் பக்கத்தில் இந்த அப்டேட்டினை நீங்கள் காணலாம். தி இன்ஃபர்மேசன் பக்கத்தில் வெளியான தகவல்களை தொடர்ந்து இந்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஃபேஸ்புக் தன்னுடைய புதிய இரண்டு நிறுவனங்களின் பக்கத்திலும் (ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்) தங்களின் பெயரை இணைத்துக் கொள்ள விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் என்பதை மக்கள் மனதில் திட்டவட்டமாய் நிலை நிறுத்த இப்படி ஒரு முயற்சியை மேற்கொண்டிருக்கிறது ஃபேஸ்புக். அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் பேசுகையில் “ஃபேஸ்புக் நிறுவனத்தில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு ஆப்கள் குறித்தும் நாங்கள் தெளிவுடன் இருக்க வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டாலர்களை கொடுத்து வாட்ஸ்ஆப் நிறுவனத்தை 2014ம் ஆண்டு வாங்கியது. 2018 வரை ஒன்றிணைந்து செயல்பட்ட ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் நிறுவனர்களின் இடையே ஏற்பட்ட கருத்து மோதலின் காரணமாக கடந்த ஆண்டு வாட்ஸ்ஆப் நிறுவர்கள் முகநூல் குழுமத்தில் இருந்து வெளியேறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : WhatsApp Fingerprint authentication : ஆண்ட்ராய்ட் வாட்ஸ்ஆப்பிலும் பயன்பாட்டுக்கு வந்தது ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்